இந்தியா மற்றும் வெஸ்ட் இண்டீஸ் அணிகளுக்கு இடையேயான முதல் 2 டி20 போட்டிகள் அமெரிக்காவின் ஃப்ளோரிடா மாகாணத்தில் நடக்கிறது. 

இந்தியா மற்றும் வெஸ்ட் இண்டீஸ் அணிகளுக்கு இடையேயான முதல் டி20 போட்டி இந்திய நேரப்படி இன்று இரவு 8 மணிக்கு தொடங்குகிறது. இந்த போட்டியில் யுனிவர்ஸ் பாஸ் கிறிஸ் கெய்லின் சிக்ஸர் சாதனையை ரோஹித் சர்மா முறியடிக்க வாய்ப்புள்ளது. 

கெய்ல் 58 சர்வதேச டி20 போட்டிகளில் ஆடி 105 சிக்ஸர்களை விளாசி, சர்வதேச டி20 கிரிக்கெட்டில் அதிக சிக்ஸர்கள் அடித்த வீரர்கள் பட்டியலில் முதலிடத்தில் உள்ளார். அவருக்கு அடுத்த இடத்தில் 103 சிக்ஸர்களை விளாசிய மார்டின் கப்டில் உள்ளார். 

102 சிக்ஸர்களுடன் மூன்றாவது இடத்தில் இருக்கும் ரோஹித் சர்மா, இன்றைய போட்டியில் 4 சிக்ஸர்கள் விளாசினால் கெய்லை பின்னுக்கு தள்ளி முதலிடத்தை பிடித்துவிடுவார்.