டெல்லியில் காற்று மாசு அதிகமுள்ளதால் அங்கு ஆடுவது வீரர்களுக்கு மிகவும் கடினமாக இருக்கும். ஆனால் காலம் கடந்துவிட்டதால், இனிமேல் போட்டியை வேறு இடத்திற்கு மாற்ற முடியாது என்பதால் போட்டி திட்டமிட்டபடி டெல்லியில் நடந்தே தீரும் என்று பிசிசிஐ தலைவர் கங்குலி தெரிவித்துவிட்டார்.
3 டி20 போட்டிகள் மற்றும் 2 டெஸ்ட் போட்டிகள் கொண்ட தொடரில் ஆடுவதற்காக வங்கதேச அணி இந்தியாவிற்கு வந்துள்ளது.
முதல் போட்டி வரும் 3ம் தேதி டெல்லி அருண் ஜேட்லி மைதானத்தில் நடக்கவுள்ளது. டெல்லியில் காற்று மாசு அதிகமுள்ளதால் அங்கு ஆடுவது வீரர்களுக்கு மிகவும் கடினமாக இருக்கும். ஆனால் காலம் கடந்துவிட்டதால், இனிமேல் போட்டியை வேறு இடத்திற்கு மாற்ற முடியாது என்பதால் போட்டி திட்டமிட்டபடி டெல்லியில் நடந்தே தீரும் என்று பிசிசிஐ தலைவர் கங்குலி தெரிவித்துவிட்டார்.
இந்தியா மற்றும் வங்கதேச வீரர்கள் முகத்தில் மாஸ்க் அணிந்துகொண்டு பயிற்சியில் ஈடுபட்டுள்ளனர். வங்கதேச வீரர்கள் காற்று மாசால் மிகவும் சிரமப்படுகின்றனர். போட்டி நாளை மறுநாள் தொடங்கவுள்ள நிலையில், வலைப்பயிற்சியில் ஈடுபட்டிருந்தபோது, கேப்டன் ரோஹித் சர்மாவிற்கு காலில் காயம் ஏற்பட்டது.
வலைப்பயிற்சியில் நுவான் செனிவிரத்னே வீசிய பந்தில் ரோஹித்துக்கு காலில் அடிபட்டது. உடனடியாக ரோஹித் களத்திலிருந்து வெளியேறினார். அவர் நடந்துசெல்லும்போது பெரிதாக சிரமப்படவில்லை. எனவே பெரிய அடியாக இருக்க வாய்ப்பில்லை. முன்னெச்சரிக்கை காரணமாகவே களத்திலிருந்து வெளியேறியிருக்கலாம் என தெரிகிறது.
விராட் கோலி டி20 தொடரில் ஆடாததால் ரோஹித் சர்மா தான் கேப்டனாக செயல்படவுள்ளார். இந்நிலையில் அவருக்கும் காலில் காயம் ஏற்பட்டிருப்பது ரசிகர்களுக்கு அதிர்ச்சியை ஏற்படுத்தியது. ஆனால் பெரிய காயமாக இருக்க வாய்ப்பில்லை. அதனால் அவர் ஆடுவதில் சிக்கல் ஏதும் இருக்காது. ஆனாலும் ரோஹித்தின் காயம் குறித்த அதிகாரப்பூர்வமான அப்டேட் இன்னும் வரவில்லை.
Read Exclusive COVID-19 Coronavirus News updates, at Asianet News Tamil.
மெய்நிகர் போட் ரேசிங் கேம் ஆடுங்கள் மற்றும் சவாலுக்கு உட்படுத்தி கொள்ளுங்கள். கிளிக் செய்து விளையாடுங்கள்
Last Updated Nov 1, 2019, 5:11 PM IST