இந்தியா - வெஸ்ட் இண்டீஸ் இடையேயான கிரிக்கெட் தொடர் நடந்துவருகிறது. முதலில் 3 போட்டிகள் கொண்ட டி20 தொடர் நடந்துவருகிறது. 

3 போட்டிகள் கொண்ட டி20 தொடரின் முதல் இரண்டு போட்டிகளிலும் இந்திய அணி வெற்றி பெற்றுள்ளது. நேற்று நடந்த இரண்டாவது டி20 போட்டியில் இந்திய அணி வென்றது. 

இந்த போட்டியில் முதலில் பேட்டிங் ஆடிய இந்திய அணி 165 ரன்கள் அடித்தது. வெஸ்ட் இண்டீஸ் அணி 15.3 ஓவரில் 4 விக்கெட் இழப்புக்கு 98 ரன்கள் அடித்திருந்த நிலையில், மழை பெய்ததால், டி.எல்.எஸ் முறைப்படி இந்திய அணி 22 ரன்கள் வித்தியாசத்தில் வென்றது. 

இந்த போட்டியில் ரோஹித் சர்மா 3 சிக்ஸர்களுடன் 67 ரன்களை குவித்தார். இந்த போட்டியில் ரோஹித் அடித்த 3 சிக்ஸர்களுடன் சேர்த்து சர்வதேச டி20 கிரிக்கெட்டில் 107 சிக்ஸர்களை விளாசியுள்ளார். இதன்மூலம் சர்வதேச டி20 கிரிக்கெட்டில் அதிக சிக்சர்கள் விளாசியிருந்த கெய்லின் சாதனையை முறியடித்து ரோஹித் முதலிடத்தை பிடித்துள்ளார். ரோஹித்துக்கு அடுத்த இடத்தில் கெய்ல்(105 சிக்ஸர்கள்) உள்ளார். மூன்றாமிடத்தில் கப்டில்(103 சிக்ஸர்கள்) உள்ளார்.