Asianet News TamilAsianet News Tamil

IPL 2021 எங்க பவுலர்கள் பிளானை கொஞ்சம் மிஸ் பண்ணாங்க.. தோனி தண்டித்துவிட்டார் - ரிக்கி பாண்டிங்

தோனிக்கு எதிரான திட்டத்தை மிகத்துல்லியமாக செயல்படுத்த வேண்டும். கொஞ்சம் மிஸ்ஸானால் கூட தோனி தண்டித்துவிடுவார் என்று டெல்லி கேபிடள்ஸ் அணியின் தலைமை பயிற்சியாளரும் லெஜண்ட் கிரிக்கெட்டருமான ரிக்கி பாண்டிங் தெரிவித்துள்ளார்.
 

ricky ponting says that delhi capitals missed the areas to bowled and so dhoni punished in ipl 2021 first qualifier match
Author
Dubai - United Arab Emirates, First Published Oct 11, 2021, 4:50 PM IST

ஐபிஎல் 14வது சீசனின் முதல் தகுதிச்சுற்றில் போட்டியில் டெல்லி கேபிடள்ஸை 4 விக்கெட் வித்தியாசத்தில் வீழ்த்தி சிஎஸ்கே அணி அபார வெற்றி பெற்றது. இந்த போட்டியில் முதலில் பேட்டிங் ஆடிய டெல்லி கேபிடள்ஸ் அணி 172 ரன்கள் அடித்தது. 

173 ரன்கள் என்ற இலக்கை விரட்டிய சிஎஸ்கே அணியில் தொடக்க வீரர் ருதுராஜும், ராபின் உத்தப்பாவும் சிறப்பாக ஆடினர். அவர்கள் இருவருமே அரைசதம் அடித்த நிலையில், உத்தப்பா 63 ரன்னிலும், ருதுராஜ் 70 ரன்னிலும் ஆட்டமிழந்தனர். ருதுராத் 19வது ஓவரின் முதல் பந்தில் ஆட்டமிழக்க, 11 பந்துகள் மட்டுமே எஞ்சியிருந்த நிலையில் வெற்றிக்கு 24 ரன்கள் தேவை என்றிருந்தபோது, ஜடேஜாவை இறக்காமல் தோனி களத்திற்கு வந்தார்.

ஆவேஷ் கான் வீசிய அந்த ஓவரின்(19) 5வது பந்தில் சிக்ஸர் விளாசிய தோனி, கடைசி ஓவரில் தொடர்ச்சியாக 3 பவுண்டரிகளை அடித்து சிஎஸ்கே அணியை வெற்றி பெற செய்தார். 6 பந்தில் 3 பவுண்டரிகள் மற்றும் ஒரு சிக்ஸருடன் 18 ரன்கள் விளாசிய தோனி, நீண்ட இடைவெளிக்கு பிறகு ஒரு போட்டியை வெற்றிகரமாக முடித்துக்கொடுத்தார். தோனியின் பேட்டிங்கை அவரது ரசிகர்களும் சிஎஸ்கே ரசிகர்களும் கொண்டாடிவருகின்றனர்.

இந்நிலையில், தோனியின் ஃபினிஷிங் குறித்து பேசியுள்ள டெல்லி கேபிடள்ஸ் அணி தலைமை பயிற்சியாளர் ரிக்கி பாண்டிங், தோனி தலைசிறந்த வீரர்களில் ஒருவர் என்பதில் எந்த சந்தேகமும் இல்லை. அந்த சூழலில் பேட்டிங் ஆட களத்திற்கு தோனி வருவாரா அல்லது ஜடேஜா வருவாரா என்ற விவாதம் எங்கள் அணியில் நடந்தது. அந்த சூழலில் ஆட்டத்தில் இருந்த பதற்றத்தை தணிக்க தோனி தான் வருவார் என நான் உறுதியாக நம்பினேன்.

தோனிக்கு எதிரான திட்டத்தை கடைசி 2 ஓவர்களில் எங்கள் வீரர்கள் சரியாக செயல்படுத்தவில்லை. தோனியிடம் கொஞ்சம் மிஸ்ஸானால் கூட, எதிரணி தண்டிக்கப்படும். அதுதான் எங்களுக்கு நடந்தது. தோனி சிறந்த ஃபினிஷர் என்று ரிக்கி பாண்டிங் தெரிவித்துள்ளார்.
 

Follow Us:
Download App:
  • android
  • ios