Asianet News TamilAsianet News Tamil

முதன்முறையாக உலக கோப்பையை வெல்லப்போகும் அணி எது..? ரிக்கி பாண்டிங் அதிரடி

லண்டன் லார்ட்ஸில் இன்று பிற்பகல் 3 மணிக்கு இறுதி போட்டி நடக்கவுள்ளது. இந்திய அணியை போராடி வீழ்த்திய நியூசிலாந்து அணியும், ஆஸ்திரேலிய அணியை அசால்ட்டா வீழ்த்திய இங்கிலாந்து அணியும் இறுதி போட்டியில் மோதுகின்றன. 
 
ricky ponting predicts the world cup 2019 winner
Author
England, First Published Jul 14, 2019, 10:34 AM IST

உலக கோப்பை தொடர் இறுதிக்கட்டத்தை எட்டிவிட்டது. இன்றுடன் உலக கோப்பை தொடர் முடிவடைகிறது. இறுதி போட்டியில் நியூசிலாந்து மற்றும் இங்கிலாந்து அணிகள் மோதுகின்றன.

லண்டன் லார்ட்ஸில் இன்று பிற்பகல் 3 மணிக்கு இறுதி போட்டி நடக்கவுள்ளது. இந்திய அணியை போராடி வீழ்த்திய நியூசிலாந்து அணியும், ஆஸ்திரேலிய அணியை அசால்ட்டா வீழ்த்திய இங்கிலாந்து அணியும் இறுதி போட்டியில் மோதுகின்றன. 

ricky ponting predicts the world cup 2019 winner

இரு அணிகளுமே லீக் சுற்றில் வெற்றி தோல்விகளை சந்தித்து ஏற்ற இறக்கங்களுடன் தான் அரையிறுதிக்கு முன்னேறியது. அரையிறுதியில் சிறப்பாக ஆடி இறுதி போட்டிக்கு முன்னேறியுள்ளன. இரு அணிகளுமே இதுவரை ஒருமுறை கூட உலக கோப்பையை வென்றதில்லை என்பதால் இந்த முறை உலக கோப்பையை இதுவரை தூக்காத அணி தூக்குவது உறுதியாகிவிட்டது. 

ricky ponting predicts the world cup 2019 winner

இந்நிலையில், இந்த உலக கோப்பையை வெல்லப்போவது எந்த அணி என ஆஸ்திரேலிய அணியின் முன்னாள் கேப்டனும் தற்போதைய பயிற்சியாளருமான ரிக்கி பாண்டிங் கணித்துள்ளார். இதுகுறித்து பேசிய பாண்டிங், இங்கிலாந்து அணி தான் கோப்பையை வெல்லும் என்று நினைக்கிறேன். உலக கோப்பை தொடர் தொடங்குவதற்கு முன்பே, இங்கிலாந்து அணியை ஃபேவரைட்ஸாக சொல்லியிருந்தேன். அதுமட்டுமல்லாது இங்கிலாந்து வீழ்த்துவதற்கு கடினமான அணி என்றும் கூறியிருந்தேன். 

ricky ponting predicts the world cup 2019 winner

எனவே அந்த கருத்தில் இப்போது மாற்றம் கிடையாது. நியூசிலாந்து அணி அபாரமாக ஆடிவருகிறது. தொடர்ச்சியாக 2 உலக கோப்பை தொடர்களில் இறுதி போட்டிக்கு முன்னேறுவது மிகப்பெரிய சாதனை. நியூசிலாந்து அணியில் மிகச்சிறந்த அனுபவ வீரர்கள் உள்ளனர். எனவே போட்டி கடுமையாக இருக்கும். ஆனால் கோப்பையை இங்கிலாந்துதான் வெல்லும் என்பது எனது கருத்து என்று பாண்டிங் தெரிவித்துள்ளார். 
 
Follow Us:
Download App:
  • android
  • ios