ஆஸ்திரேலியாவில் நடத்தப்படும் டி20 லீக் தொடரான பிக்பேஷ் லீக்கில் 9 சீசன்கள் முடிந்து 10வது சீசன் நடந்துவருகிறது. வெற்றிகரமாக நடத்திவரப்படும் டி20 லீக் தொடர்களில் பிக்பேஷ் லீக்கும் ஒன்று.

அந்தவகையில், பிக்பேஷ் லீக்கின் ஆல்டைம் சிறந்த 11 வீரர்களை ஆஸி., முன்னாள் கேப்டன் ரிக்கி பாண்டிங் தேர்வு செய்துள்ளார். ஆரோன் ஃபின்ச் மற்றும் ஷான் மார்ஷ் ஆகிய இருவரையும் தொடக்க வீரர்களாக தேர்வு செய்த பாண்டிங், ஃபின்ச்சையே கேப்டனாகவும் தேர்வு செய்துள்ளார். பிராட் ஹாட்ஜ்ஜை 3ம் வரிசை வீரராகவும், மேக்ஸ்வெல்லை 4ம் வரிசை வீரராகவும், ஆஸி., முன்னாள் கேப்டன் ஜார்ஜ் பெய்லியை ஐந்தாம் வரிசை வீரராகவும் தேர்வு செய்துள்ளார்.

ஆல்ரவுண்டராக மார்கஸ் ஸ்டோய்னிஸையும், விக்கெட் கீப்பராக மேத்யூ வேடையும் தேர்வு செய்த பாண்டிங், ஃபாஸ்ட் பவுலர்களாக சீன் அபாட், பென் லாஃப்லின், லசித் மலிங்காவையும் தேர்வு செய்துள்ளார். ஸ்பின்னராக ரஷீத் கானை பாண்டிங் தேர்வு செய்துள்ளார்.

பாண்டிங் தேர்வு செய்துள்ள பிக்பேஷ் லீக்கின் ஆல்டைம் லெவன்:

ஆரோன் ஃபின்ச்(கேப்டன்), ஷான் மார்ஷ், பிராட் ஹாட்ஜ், க்ளென் மேக்ஸ்வெல், ஜார்ஜ் பெய்லி, மார்கஸ் ஸ்டோய்னிஸ், மேத்யூ வேட்(விக்கெட் கீப்பர்), சீன் அபாட், ரஷீத் கான், லாஃப்லின், லசித் மலிங்கா.