ஐபிஎல் 14வது சீசனின் இன்றைய போட்டியில் ஆர்சிபி மற்றும் ராஜஸ்தான் ராயல்ஸ் அணிகள் மோதுகின்றன. மும்பை வான்கடேவில் நடக்கும் இந்த போட்டியில் டாஸ் வென்ற ஆர்சிபி கேப்டன் கோலி, ராஜஸ்தான் ராயல்ஸை முதலில் பேட்டிங் செய்ய பணித்தார்.

ஆர்சிபி மற்றும் ராஜஸ்தான் ராயல்ஸ் ஆகிய இரு அணிகளிலுமே தலா ஒரு மாற்றம் செய்யப்பட்டுள்ளது. ஆர்சிபி அணி கடந்த போட்டியில் 3 வெளிநாட்டு வீரர்களுடன் மட்டுமே ஆடிவந்த நிலையில் இன்றைய போட்டியில் ரஜாத் பட்டிதர் நீக்கப்பட்டு, ஆஸி., ஃபாஸ்ட் பவுலர் கேன் ரிச்சர்ட்ஸன் சேர்க்கப்பட்டுள்ளார்.

ஆர்சிபி அணி:

விராட் கோலி(கேப்டன்), தேவ்தத் படிக்கல், ஷபாஸ் அகமது, க்ளென் மேக்ஸ்வெல், டிவில்லியர்ஸ்(விக்கெட் கீப்பர்), வாஷிங்டன் சுந்தர், கேன் ரிச்சர்ட்ஸன், கைல் ஜாமிசன், ஹர்ஷல் படேல், முகமது சிராஜ், யுஸ்வேந்திர சாஹல்.

ராஜஸ்தான் ராயல்ஸ் அணியில் ஃபாஸ்ட் பவுலர் ஜெய்தேவ் உனாத்கத் நீக்கப்பட்டு, அவருக்கு பதிலாக ரிஸ்ட் ஸ்பின்னர் ஷ்ரேயாஸ் கோபால் சேர்க்கப்பட்டுள்ளார். கோலி மற்றும் டிவில்லியர்ஸுக்கு எதிராக நல்ல ரெக்கார்டை வைத்திருப்பதால் ஷ்ரேயாஸ் கோபால் சேர்க்கப்பட்டுள்ளார். கோலி, டிவில்லியர்ஸ் ஆகிய இருவருமே ரிஸ்ட் ஸ்பின்னுக்கு திணறியிருக்கிறார்கள் என்பதால், ராகுல் டெவாட்டியாவுடன் ஷ்ரேயாஸ் கோபாலும் இணைவது ஆர்சிபியை மிடில் ஓவர்களில் கட்டுப்படுத்த உதவும் என்பதால் ஷ்ரேயாஸ் கோபால் அணியில் எடுக்கப்பட்டுள்ளார்.

ராஜஸ்தான் ராயல்ஸ் அணி:

ஜோஸ் பட்லர், மனன் வோரா, சஞ்சு சாம்சன்(கேப்டன், விக்கெட் கீப்பர்), ஷிவம் துபே, டேவிட் மில்லர், ரியான் பராக், ராகுல் டெவாட்டியா, கிறிஸ் மோரிஸ், ஷ்ரேயாஸ் கோபால், சேத்தன் சக்காரியா, முஸ்தாஃபிசுர் ரஹ்மான்.