சிஎஸ்கேவிற்கு எதிரான போட்டியில் டாஸ் வென்ற ஆர்சிபி அணி கேப்டன் ஃபாஃப் டுப்ளெசிஸ் ஃபீல்டிங்கை தேர்வு செய்தார். 

ஐபிஎல் 15வது சீசன் விறுவிறுப்பாக நடந்துவரும் நிலையில், இந்த சீசனில் 4 முறை சாம்பியனும், நடப்பு சாம்பியனுமான சிஎஸ்கே அணி படுமோசமாக விளையாடி, ஆடிய 4 போட்டிகளிலும் படுதோல்வி அடைந்து புள்ளி பட்டியலில் கடைசி இடத்தில் உள்ளது.

முதல் வெற்றியை எதிர்நோக்கியிருக்கும் ரவீந்திர ஜடேஜா தலைமையிலான சிஎஸ்கே அணி, இன்று ஆர்சிபியை எதிர்கொள்கிறது. முதல் முறையாக கோப்பையை வெல்லும் முனைப்பில் இந்த சீசனில் ஃபாஃப் டுப்ளெசிஸின் கேப்டன்சியில் இறன்க்கியுள்ள ஆர்சிபி அணி அருமையாக ஆடி வெற்றி பெற்றுவருகிறது. இதுவரை ஆடிய 4 போட்டிகளில் 3 வெற்றிகளுடன் புள்ளி பட்டியலில் ஆர்சிபி அணி 3ம் இடத்தில் உள்ளது.

இந்த சீசனில் முதல் வெற்றியை பெறும் முனைப்பில் சிஎஸ்கே அணியும், வெற்றிப்பயணத்தை தொடரும் முனைப்பில் ஆர்சிபி அணியும் இன்று மோதுகின்றன. மும்பை டி.ஒய்.பாட்டீல் மைதானத்தில் நடக்கும் இந்த போட்டியில் டாஸ் வென்ற ஆர்சிபி அணி ஃபீல்டிங்கை தேர்வு செய்தது.

ஆர்சிபி அணியில் 2 மாற்றங்கள் செய்யப்பட்டுள்ளன. ஹர்ஷல் படேல் ஆடாததால் அவருக்கு பதிலாக இளம் வீரரான சுயாஷ் பிரபுதேசாய் சேர்க்கப்பட்டுள்ளார். டேவிட் வில்லிக்கு பதிலாக ஜோஷ் ஹேசில்வுட் சேர்க்கப்பட்டுள்ளார்.


சிஎஸ்கே அணி தொடர் தோல்விகளை சந்தித்தாலும் ஆடும் லெவன் காம்பினேஷனில் எந்த மாற்றமும் செய்யப்படவில்லை. கடந்த போட்டியில் ஆடிய அதே ஆடும் லெவன் காம்பினேஷனுடன் தான் சிஎஸ்கே அணி களமிறங்கியுள்ளது.

ஆர்சிபி அணி:

ஃபாஃப் டுப்ளெசிஸ் (கேப்டன்), அனுஜ் ராவத், விராட் கோலி, க்ளென் மேக்ஸ்வெல், தினேஷ் கார்த்திக் (விக்கெட் கீப்பர்), ஷபாஸ் அகமது, வனிந்து ஹசரங்கா, ஜோஷ் ஹேசில்வுட், சுயாஷ் பிரபுதேசாய், ஆகாஷ் தீப், முகமது சிராஜ்.

சிஎஸ்கே அணி:

ருதுராஜ் கெய்க்வாட், ராபின் உத்தப்பா, மொயின் அலி, அம்பாதி ராயுடு, ரவீந்திர ஜடேஜா (கேப்டன்), ஷிவம் துபே, தோனி (விக்கெட் கீப்பர்), ட்வைன் பிராவோ, கிறிஸ் ஜோர்டான், மஹீஷ் தீக்‌ஷனா/ப்ரிட்டோரியஸ்/ஆடம் மில்னே.