பஞ்சாப் கிங்ஸுக்கு எதிரான போட்டியில் டாஸ் வென்ற ஆர்சிபி அணி ஃபீல்டிங்கை தேர்வு செய்துள்ளது.
ஐபிஎல் 14வது சீசனின் இன்றைய போட்டியில் ஆர்சிபியும் பஞ்சாப் கிங்ஸும் மோதுகின்றன. புள்ளி பட்டியலில் 3ம் இடத்தில் இருக்கும் ஆர்சிபி அணி, இந்த போட்டியில் வெற்றி பெற்றால் பிளே ஆஃபிற்கு தகுதிபெற்றுவிடும். பஞ்சாப் கிங்ஸ் அணி பிளே ஆஃப் வாய்ப்பை தக்கவைக்க இந்த போட்டியில் வெற்றி பெற்றாக வேண்டும்.
ஷார்ஜாவில் நடக்கும் இந்த போட்டியில் ஆர்சிபி கேப்டன் விராட் கோலி ஃபீல்டிங்கை தேர்வு செய்துள்ளார். ஷார்ஜா பிட்ச் மிகவும் ஸ்லோவாக இருப்பதால், முதலில் பேட்டிங் ஆடினால் என்ன ஸ்கோர் அடித்தால் போதுமானது என்பது புரியாமல் அணிகள் திணறிவருகின்றன. அதனால் எதிரணியால் நிர்ணயிக்கப்பட்ட இலக்கை விரட்டுவதே சிறந்தது.
பொதுவாகவே, இலக்கை விரட்ட விரும்பும் கேஎல் ராகுல் டாஸ் வென்றிருந்தால் கண்டிப்பாக ஃபீல்டிங் தான் தேர்வு செய்திருப்பார். ஆனால் விராட் கோலி, நீ(ராகுல்) விரும்பும் சாய்ஸை நானே உனக்கு தருகிறேன். முடிந்தால் நாங்கள்(ஆர்சிபி) நிர்ணயிக்கும் இலக்கை விரட்டி வெல்லுங்கள் என்று சவால் விடும் விதமாக பேட்டிங்கை தேர்வு செய்துள்ளார் கோலி.
ஆர்சிபி அணியில் எந்த மாற்றமும் செய்யப்படவில்லை. கடந்த போட்டியில் ஆடிய அதே ஆடும் லெவன் காம்பினேஷனுடன் தான் ஆர்சிபி களமிறங்கியுள்ளது.
ஆர்சிபி அணி:
விராட் கோலி(கேப்டன்), தேவ்தத் படிக்கல், ஸ்ரீகர் பரத்(விக்கெட் கீப்பர்), க்ளென் மேக்ஸ்வெல், டிவில்லியர்ஸ், டேனியல் கிறிஸ்டியன், ஜார்ஜ் கார்டன், ஷபாஸ் அகமது, ஹர்ஷல் படேல், முகமது சிராஜ், யுஸ்வேந்திர சாஹல்.
பஞ்சாப் கிங்ஸ் அணியில் 3 மாற்றங்கள் செய்யப்பட்டுள்ளன. ஃபேபியன் ஆலன் காயமடைந்ததால், அவருக்கு பதிலாக ஹர்ப்ரீத் ப்ரார் ஆடுகிறார். தீபக் ஹூடாவிற்கு பதிலாக சர்ஃபராஸ் கானும், நேதன் எல்லிஸுக்கு பதிலாக மோய்ஸஸ் ஹென்ரிக்ஸும் ஆடுகின்றனர்.
பஞ்சாப் கிங்ஸ் அணி;
கேஎல் ராகுல்(கேப்டன், விக்கெட் கீப்பர்), மயன்க் அகர்வால், மார்க்ரம், பூரன், சர்ஃபராஸ் கான், ஷருக்கான், ஹர்ப்ரீத் ப்ரார், மோய்ஸஸ் ஹென்ரிக்ஸ், ஷமி, ரவி பிஷ்னோய், அர்ஷ்தீப் சிங்.
