ஐபிஎல் 14வது சீசனில் இன்று 2 போட்டிகள் நடக்கின்றன. பிற்பகல் 3.30 மணிக்கு சென்னையில் தொடங்கும் போட்டியில் ஆர்சிபி மற்றும் கேகேஆர் அணிகள் மோதுகின்றன. 

ஆடிய 2 போட்டிகளிலும் வெற்றி பெற்ற ஆர்சிபி அணி, வெற்றி பயணத்தை தொடங்கும் முனைப்பிலும், 2 போட்டிகளில் ஒன்றில் தோற்ற கேகேஆர் தோல்வியிலிருந்து மீளும் முனைப்பிலும் களமிறங்குகின்றன. டாஸ் வென்ற ஆர்சிபி கேப்டன் விராட் கோலி பேட்டிங்கை தேர்வு செய்தார்.

ஆர்சிபி அணியில் ஒரேயொரு மாற்றம் செய்யப்பட்டுள்ளது. வெளிநாட்டு வீரர் டேனியல் கிறிஸ்டியன் நீக்கப்பட்டு, உள்நாட்டு வீரரான ரஜாத் பட்டிதர் அணியில் சேர்க்கப்பட்டுள்ளார். இதன்மூலம் 3 வெளிநாட்டு வீரர்களுடன் மட்டுமே ஆர்சிபி ஆடுகிறது. ஒரு அணி அதிகபட்சமாக 4 வெளிநாட்டு வீரர்களுடன் ஆடமுடியும் என்றாலும், உள்நாட்டு வீரர்கள் மீது நம்பிக்கை வைத்து 4 வெளிநாட்டு வீரர்களுக்கான அவசியமில்லை என்ற நம்பிக்கையுடன், மேக்ஸ்வெல், டிவில்லியர்ஸ், ஜாமிசன் ஆகிய 3 வெளிநாட்டு வீரர்களுடன் ஆர்சிபி களமிறங்கியுள்ளது.

ஆர்சிபி அணி:

விராட் கோலி(கேப்டன்), தேவ்தத் படிக்கல், ரஜாத் பட்டிதர், க்ளென் மேக்ஸ்வெல், டிவில்லியர்ஸ்(விக்கெட் கீப்பர்), வாஷிங்டன் சுந்தர், ஷபாஸ் அகமது, கைல் ஜாமிசன், ஹர்ஷல் படேல், முகமது சிராஜ், யுஸ்வேந்திர சாஹல்.

கேகேஆர் அணியின் ஆடும் லெவன் காம்பினேஷனில் எந்த மாற்றமும் செய்யப்படவில்லை. கடந்த போட்டியில் ஆடிய அதே ஆடும் லெவன் காம்பினேஷனுடன் தான் இந்த போட்டியிலும் ஆடுகிறது.

கேகேஆர் அணி:

நிதிஷ் ராணா, ஷுப்மன் கில், ராகுல் திரிபாதி, ஒயின் மோர்கன்(கேப்டன்), ஷகிப் அல் ஹசன், தினேஷ் கார்த்திக்(விக்கெட் கீப்பர்), ஆண்ட்ரே ரசல், பாட் கம்மின்ஸ், ஹர்பஜன் சிங், பிரசித் கிருஷ்ணா, வருண் சக்கரவர்த்தி.