தினேஷ் கார்த்திக் பறக்க விட்ட ஒரே மாதிரியான 4 ஸ்கூப் ஷாட்டுகளில் 4, 4, 4, 4 – ஆடிப்போன ஆகாஷ் மத்வால்!

மும்பை இந்தியன்ஸ் வீரர் ஆகாஷ் மத்வால் ஓவரில் தினேஷ் கார்த்திக் அடித்த ஒரே மாதிரியான 4 ஸ்கூப் ஷாட்டுகளுமே பவுண்டரியாக மாறியுள்ளது.

RCB Star Player Dinesh Karthik hit 4 Scoop shot in short third man and getting 4 boundaries in the same region rsk

மும்பை இந்தியன்ஸ் மற்றும் ராயல் சேலஞ்சர்ஸ் பெங்களூரு அணிகளுக்கு இடையிலான 25ஆவது லீக் போட்டி மும்பை வான்கடே மைதானத்தில் நடைபெற்றது. இதில், முதலில் பேட்டிங் செய்த ஆர்சிபி அணியில் பாப் டூப் ளெசிஸ் 61, ரஜத் படிதார் 50 மற்றும் தினேஷ் கார்த்திக் 53* ரன்கள் எடுக்க 20 ஓவர்களில் 8 விக்கெட்டுகளை இழந்து 196 ரன்கள் குவித்தது. பவர்பிளே ஓவரிலேயே விராட் கோலி 3 மற்றும் வில் ஜாக்ஸை இழந்து ஆர்சிபி தடுமாறியது.

அப்போது தான் ரஜத் படிதார் களமிறங்கி அதிரடியாக விளையாடி அரைசதம் அடித்து ஆட்டமிழந்தார். அடுத்து வந்த கிளென் மேக்ஸ்வெல் ரன் ஏதும் எடுக்காமல் நடையை கட்டினார். இவரைத் தொடர்ந்து தினேஷ் கார்த்திக் களமிறங்கினார். அவர் 9 பந்துகளில் 6 ரன்கள் எடுத்திருந்த போது, போட்டியின் 16ஆவது ஓவரை மும்பை இந்தியன்ஸ் வீரர் ஆகாஷ் மத்வால் வீசினார்.

அந்த ஓவரின் 2ஆவது பந்தில் Short Third Man திசையில் ஸ்கூப் ஷாட்டுகளை பறக்க விட்டு 4 ரன்கள் எடுத்தார். இதே போன்று, 4ஆவது பந்திலேயும் அதே மாதிரியான ஷாட்டுகளை அதே திசையில் அடித்து 4 ரன்கள் சேர்த்தார். 5ஆவது பந்திலேயும், அதே ஷாட், அதே திசையில் பவுண்டரி. கடைசியில் 6ஆவது ஓவரிலேயும் அதே ஷாட், அதே திசை பவுண்டரி. இப்படி ஒரே ஷாட்டுகளை, ஒரே திசையில் ஒரே ஓவரில் அடித்த தினேஷ் கார்த்திக்கை ரோகித் சர்மா கைதட்டி பாராட்டியதோடு, டி20 உலகக் கோப்பையில் உங்களை சேர்த்துவிடலாம், நீங்கள் டி20 உலகக் கோப்பையில் விளையாட வேண்டும் என்று கூறியிருக்கிறார். இது தொடர்பான வீடியோ வைரலானது.

அப்போது, இஷான் கிஷான் அவர் கூறுவதைக் கேட்டுக் கொண்டிருந்தார் என்பது குறிப்பிடத்தக்கது. இந்தப் போட்டியில் தினேஷ் கார்த்திக் 23 பந்துகளில் 5 பவுண்டரி, 4 சிக்ஸ் உள்பட 53 ரன்கள் எடுத்து ஆட்டமிழக்காமல் இருந்தார். இந்த தொடரில் இதுவரையில் 6 போட்டிகளில் விளையாடிய ஆர்சிபியில் தினேஷ் கார்த்திக் 38*, 28*, 20, 4, 53* (மும்பை போட்டி) என்று ரன்கள் சேர்த்துள்ளார்.

 

 

Latest Videos
Follow Us:
Download App:
  • android
  • ios