ஐபிஎல்லில் முதல் முறையாக கோப்பையை வெல்லும் முனைப்பிலேயே ஒவ்வொரு சீசனையும் எதிர்கொள்ளும் ஆர்சிபி அணி, இந்த சீசனில் அபாரமாக ஆடிவருகிறது. இந்த சீசனில் ஆடிய 3 போட்டிகளிலும் வெற்றி பெற்றுள்ள ஆர்சிபி அணி, வெற்றி பயணத்தை தொடரும் முனைப்பில் ராஜஸ்தான் ராயல்ஸை இன்று எதிர்கொள்கிறது.

இன்றைய போட்டியில் களமிறங்கும் ஆர்சிபி அணியில் எந்த மாற்றமும் செய்யப்பட வாய்ப்பில்லை. கடந்த போட்டியில் ஆடிய அதே காம்பினேஷனுடன் தான் களமிறங்கும். ஐபிஎல்லில் ஆர்சிபி அணி ஒவ்வொரு சீசனிலும் ஆடும் லெவன் காம்பினேஷனை மாற்றிக்கொண்டே இருக்கும். அதுவே செட் ஆகவில்லை என்பதால் கோப்பையையும் ஜெயிக்க முடியவில்லை.

ஆனால் இந்த சீசனில் மேக்ஸ்வெல், ரஜாத் பட்டிதர், ஹர்ஷல் படேல், கைல் ஜாமிசன் ஆகிய வீரர்களை வைத்து ஆடும் லெவன் காம்பினேஷனை வலுவாக செட் செய்துள்ளதால், பெரிதாக மாற்றம் செய்வதற்கான வாய்ப்பில்லை. 

உத்தேச ஆர்சிபி ஆடும் லெவன்:

விராட் கோலி(கேப்டன்), தேவ்தத் படிக்கல், ரஜாத் பட்டிதர், க்ளென் மேக்ஸ்வெல், டிவில்லியர்ஸ்(விக்கெட் கீப்பர்), வாஷிங்டன் சுந்தர், ஷபாஸ் அகமது, கைல் ஜாமிசன், ஹர்ஷல் படேல், முகமது சிராஜ், யுஸ்வேந்திர சாஹல்.