Asianet News TamilAsianet News Tamil

#PBKSvsRCB இந்த சீசனில் ஆர்சிபி அணிக்கு அதுக்கான அவசியமே இல்லாம போயிடுச்சே..! இதுவே பெரிய சாதனை தான்

பஞ்சாப் கிங்ஸ் அணிக்கு எதிரான போட்டியில் களமிறங்கும் ஆர்சிபி அணியின் உத்தேச ஆடும் லெவனை பார்ப்போம்.
 

rcb probable playing eleven for the match against punjab kings in ipl 2021
Author
Ahmedabad, First Published Apr 30, 2021, 5:30 PM IST

ஐபிஎல்லில் இதுவரை ஒருமுறை கூட கோப்பையை வென்றிராத ஆர்சிபி அணி, இந்த சீசனில் மிகச்சிறப்பாக ஆடி வெற்றிகளை குவித்துவருகிறது. இதுவரை ஆடிய 6 போட்டிகளில் 5 வெற்றிகளுடன் 10 புள்ளிகளை பெற்று புள்ளி பட்டியலில் டாப் 2-3 இடங்களிலேயே தொடர்ந்து நீடித்துவருகிறது.

வழக்கமாக ஆர்சிபி அணி, ஒவ்வொரு சீசனிலும் சரியான ஆடும் லெவன் காம்பினேஷன் எதுவென்றே கண்டுபிடிக்காமல், ஒவ்வொரு போட்டியிலும் ஏதாவது மாற்றங்களை செய்துகொண்டே இருக்கும். ஆனால் இந்த சீசனில் மேக்ஸ்வெல், ஜாமிசன் ஆகியோரின் வருகையால், ஆடும் லெவன் காம்பினேஷன் நன்றாக செட் ஆகிவிட்டது.

எனவே ஆடும் லெவன் காம்பினேஷனில் எந்த மாற்றமும் செய்யப்படுவதில்லை. அவசியமிருந்தால் கூட அதிகபட்சமாக ஒரு மாற்றம் செய்யப்படுகிறது. இது ஆர்சிபி அணிக்கு நல்ல விஷயம்.

பஞ்சாப் கிங்ஸுக்கு எதிராக இன்று ஆர்சிபி அணி ஆடும் போட்டியிலும், எந்த மாற்றமும் செய்யாமல், கடந்த போட்டியில் ஆடிய அதே ஆடும் லெவன் காம்பினேஷனுடன் தான் களமிறங்கும் ஆர்சிபி அணி.

உத்தேச ஆர்சிபி அணி:

கோலி(கேப்டன்), படிக்கல், ரஜாத் பட்டிதர், மேக்ஸ்வெல், டிவில்லியர்ஸ்(விக்கெட் கீப்பர்), டேனியல் சாம்ஸ், வாஷிங்டன் சுந்தர், கைல் ஜாமிசன், ஹர்ஷல் படேல், முகமது சிராஜ், யுஸ்வேந்திர சாஹல்.

ஆர்சிபி அணியை பொறுத்தமட்டில், ஆடும் லெவன் காம்பினேஷனில் மாற்றமே செய்யவில்லை என்ற நிலைக்கு அந்த அணி சென்றிருப்பதே பெரிய சாதனை தான். 
 

Follow Us:
Download App:
  • android
  • ios