Asianet News TamilAsianet News Tamil

#DCvsRCB கேட்ச்சை விட்டு மேட்ச்சையே காலி பண்ணியே நீ கிளம்புப்பா..! ஆர்சிபி அணியில் 2 அதிரடி மாற்றங்கள்

டெல்லி கேபிடள்ஸ் அணிக்கு எதிரான இன்றைய போட்டியில் களமிறங்கும் உத்தேச ஆர்சிபி அணியை பார்ப்போம்.
 

rcb probable playing eleven for the match against delhi capitals in ipl 2021
Author
Ahmedabad, First Published Apr 27, 2021, 3:50 PM IST

ஐபிஎல் 14வது சீசன் விறுவிறுப்பாக நடந்துவருகிறது. இன்றைய போட்டியில் புள்ளி பட்டியலில் 2 மற்றும் 3ம் இடங்களில் இருக்கும் டெல்லி கேபிடள்ஸ் மற்றும் ஆர்சிபி அணிகள் மோதுகின்றன. 

அகமதாபாத் நரேந்திர மோடி ஸ்டேடியத்தில் நடக்கும் இந்த போட்டியில் ஆர்சிபி அணி 2 அதிரடி மாற்றங்களுடன் களமிறங்கும். டேனியல் கிறிஸ்டியனுக்கு பதிலாக இடது கை ஃபாஸ்ட் பவுலர் டேனியல் சாம்ஸ் சேர்க்கப்படுவார் என்று எதிர்பார்க்கப்படுகிறது.

சிஎஸ்கேவிற்கு எதிரான போட்டியில் டேனியல் கிறிஸ்டியன் தவறவிட்ட கேட்ச் தான் ஆர்சிபி அணியின் தோல்விக்கே வழிவகுத்தது. ஜடேஜா ரன் கணக்கை தொடங்கும் முன்பே, கை மேல் கொடுத்த கேட்ச்சை கிறிஸ்டியன் கோட்டைவிட்டார். அதை பயன்படுத்திக்கொண்ட ஜடேஜா, கடைசி ஓவரில் 37 ரன்களை விளாச, அதுவே ஆர்சிபி அணியின் தோல்விக்கும் வித்திட்டது. எனவே இன்றைய போட்டியில் கிறிஸ்டியனுக்கு பதிலாக டேனியல் சாம்ஸ் சேர்க்கப்படலாம்.

அதேபோல, நவ்தீப் சைனிக்கு பதிலாக ஷபாஸ் அகமது சேர்க்கப்படலாம் என்று எதிர்பார்க்கப்படுகிறது.

உத்தேச ஆர்சிபி அணி:

விராட் கோலி(கேப்டன்), தேவ்தத் படிக்கல், ஷபாஸ் அகமது, மேக்ஸ்வெல், மேக்ஸ்வெல், டிவில்லியர்ஸ்(விக்கெட் கீப்பர்), வாஷிங்டன் சுந்தர், டேனியல் சாம்ஸ், கைல் ஜாமிசன், ஹர்ஷல் படேல், யுஸ்வேந்திர சாஹல், முகமது சிராஜ்.
 

Follow Us:
Download App:
  • android
  • ios