ஆர்சிபி மற்றும் கேகேஆர் அணிகளுக்கு இடையேயான போட்டி சென்னை சேப்பாக்கம் மைதானத்தில் பிற்பகல் 3.30 மணிக்கு தொடங்கி நடந்துவருகிறது. டாஸ் வென்ற ஆர்சிபி கேப்டன் விராட் கோலி பேட்டிங்கை தேர்வு செய்தார்.

இந்த போட்டியில் ஆர்சிபி அணி ஒரேயொரு மாற்றத்துடன் களமிறங்கியுள்ளது. ஆர்சிபி அணியில் ஒரேயொரு மாற்றம் செய்யப்பட்டுள்ளது. வெளிநாட்டு வீரர் டேனியல் கிறிஸ்டியன் நீக்கப்பட்டு, உள்நாட்டு வீரரான ரஜாத் பட்டிதர் அணியில் சேர்க்கப்பட்டுள்ளார். 

ஆர்சிபி அணி:

விராட் கோலி(கேப்டன்), தேவ்தத் படிக்கல், ரஜாத் பட்டிதர், க்ளென் மேக்ஸ்வெல், டிவில்லியர்ஸ்(விக்கெட் கீப்பர்), வாஷிங்டன் சுந்தர், ஷபாஸ் அகமது, கைல் ஜாமிசன், ஹர்ஷல் படேல், முகமது சிராஜ், யுஸ்வேந்திர சாஹல்.

கேகேஆர் அணியின் ஆடும் லெவன் காம்பினேஷனில் எந்த மாற்றமும் செய்யப்படவில்லை. கடந்த போட்டியில் ஆடிய அதே ஆடும் லெவன் காம்பினேஷனுடன் தான் இந்த போட்டியிலும் ஆடுகிறது.

கேகேஆர் அணி:

நிதிஷ் ராணா, ஷுப்மன் கில், ராகுல் திரிபாதி, ஒயின் மோர்கன்(கேப்டன்), ஷகிப் அல் ஹசன், தினேஷ் கார்த்திக்(விக்கெட் கீப்பர்), ஆண்ட்ரே ரசல், பாட் கம்மின்ஸ், ஹர்பஜன் சிங், பிரசித் கிருஷ்ணா, வருண் சக்கரவர்த்தி.

விராட் கோலியும் தேவ்தத் படிக்கல்லும் தொடக்க வீரர்களாக களமிறங்கினர். முதல் ஓவரை சீனியர் ஸ்பின்னர் ஹர்பஜன் சிங் வீச, 2வது ஓவரை வீசிய வருண் சக்கரவர்த்தி அந்த ஓவரின் 2வது பந்தில் பெரிய விக்கெட்டான கோலியின் விக்கெட்டை வீழ்த்தினார். கோலி 5 ரன்னில் ஆட்டமிழக்க, அதே ஓவரின் கடைசி பந்தில் ரஜாத் பட்டிதரையும் டக் அவுட்டாக்கி அனுப்ப, ஆர்சிபி அணி  2 ஓவரில் 9 ரன்களுக்கே 2 விக்கெட்டுகளை இழந்துவிட்டது.

இதையடுத்து க்ளென் மேக்ஸ்வெல்லும் தேவ்தத் படிக்கல்லும் இணைந்து ஆடிவருகின்றனர். மேக்ஸ்வெல் இந்த இன்னிங்ஸை நல்ல விதமாக தொடங்கி சிறப்பாக ஆடிவருகிறார்.