ஐபிஎல்லில் 12 சீசன்கள் நடந்து முடிந்துள்ளன. 13வது சீசன் அடுத்த மாதம் தொடங்குகிறது. இதுவரை நடந்த 12 சீசன்களில் ஒருமுறை கூட கோப்பையை வென்றிராத 3 அணிகளில் ஆர்சிபி அணியும் ஒன்று. 

விராட் கோலி, டிவில்லியர்ஸ் ஆகிய தலைசிறந்த வீரர்கள் அணியில் இருந்தும் கூட, அந்த அணியின் தவறான அணுகுமுறையால் இதுவரை கோப்பையை வெல்ல முடியவில்லை. எனவே வரும் சீசனில் முதல் முறையாக ஐபிஎல் டைட்டிலை வெல்லும் முனைப்பில் ஆர்சிபி உள்ளது. 

இதற்கிடையே, திடீரென ஆர்சிபி அணி, கேப்டன் கோலிக்குக்கூட தெரியாமல், அந்த அணியின் அதிகாரப்பூர்வ சமூக வலைதளப் பக்கங்களில் இருந்து ப்ரொஃபைல் படங்கள், லோகோ, பதிவுகள் ஆகியவற்றை நீக்கியது. இதைக்கண்டு கேப்டன் கோலி உட்பட டிவில்லியர்ஸ், சாஹல் ஆகிய வீரர்களும் அதிர்ச்சியடைந்தனர்.

Also Read - விக்கெட் போட முடியாமல் திணறும் பும்ராவுக்கு ஜாகீர் கானின் ஆலோசனை

இந்நிலையில் ஆர்சிபி அணி புதிய லோகோவை வெளியிட்டுள்ளது. ஐபிஎல் தொடங்கியதிலிருந்து, இது ஆர்சிபி அணியின் மூன்றாவது லோகோ. 2008 முதல் 2015 வரை ஒரு லோகோ பயன்படுத்தப்பட்டது.

அதன்பின்னர் 2016 முதல் 2019 வரை வேறு லோகோ பயன்படுத்தப்பட்ட நிலையில், தற்போது மூன்றாவது புதிய லோகோ அறிமுகப்படுத்தப்பட்டுள்ளது.