ஆர்சிபி பிளே ஆஃபிற்கு முன்னேறுவது மும்பை இந்தியன்ஸின் கையில் இருப்பதால், மும்பை இந்தியன்ஸுக்கு ஆதரவளிக்கும் விதமாக ப்ரொஃபைல் படத்தை நீல நிறமாக மாற்றி வைத்துள்ளது ஆர்சிபி. 

ஐபிஎல் 15வது சீசன் இறுதிக்கட்டத்தை எட்டிவிட்ட நிலையில், குஜராத் டைட்டன்ஸ், ராஜஸ்தான் ராயல்ஸ் மற்றும் லக்னோ சூப்பர் ஜெயிண்ட்ஸ் ஆகிய 3 அணிகளும் பிளே ஆஃபிற்கு தகுதிபெற்றுவிட்ட நிலையில், எஞ்சிய ஒரு இடத்திற்கு ஆர்சிபி மற்றும் டெல்லி கேபிடள்ஸ் இடையே போட்டி நிலவுகிறது. 

Add Asianetnews Tamil as a Preferred SourcegooglePreferred

ஆர்சிபி அணி 16 புள்ளிகளுடன் புள்ளி பட்டியலில் 4ம் இடத்தில் உள்ளது. 14 புள்ளிகளை பெற்றுள்ள டெல்லி கேபிடள்ஸ் அணி, கடைசி போட்டியில் இன்று மும்பை இந்தியன்ஸை எதிர்கொள்கிறது. இந்த போட்டியில் டெல்லி அணி ஜெயித்தால் 16 புள்ளிகளை பெறும். ஆனால் நெட் ரன்ரேட்டின் அடிப்படையில், ஆர்சிபியை பின்னுக்குத்தள்ளி 4ம் இடத்தை பிடித்து பிளே ஆஃபிற்கு டெல்லி முன்னேறிவிடும். 

அதே டெல்லி அணி தோற்றுவிட்டால் ஆர்சிபி அணி பிளே ஆஃபிற்கு முன்னேறிவிடும். எனவே இந்த போட்டியில் மும்பை இந்தியன்ஸ் தான் ஜெயிக்க வேண்டும் என்று ஆர்சிபி நினைக்கும். அந்தவகையில், மும்பைஇந்தியன்ஸுக்கு ஆதரவளிக்கும் விதமாக டுவிட்டரில் ஆர்சிபி அணி ப்ரொஃபைல் படத்தை ஆர்சிபி அணியின் லோகோ நீல நிறத்தில் மாற்றப்பட்டு வைக்கப்பட்டுள்ளது.

Scroll to load tweet…

ஆர்சிபி அணி, ஆர்சிபி ரசிகர்கள் ஆகிய அனைவரும் இன்றைய போட்டியில் மும்பை இந்தியன்ஸுக்கு ஆதரவாக இருக்கிறார்கள்.