ஐபிஎல்லில் ரோஹித் தலைமையிலான மும்பை இந்தியன்ஸ் அணி 4 முறையும் தோனி தலைமையிலான சிஎஸ்கே அணி 3 முறையும் ஐபிஎல் டைட்டிலை வென்றுள்ள நிலையில், ஒருமுறை கூட ஆர்சிபி கேப்டன் விராட் கோலியால் தனது அணிக்கு கோப்பையை வென்று கொடுக்க முடியவில்லை. 

கோலி, டிவில்லியர்ஸ் ஆகிய இரண்டு தலைசிறந்த வீரர்கள் அணியில் இருந்தும் கூட, அந்த அணியின் கோர் டீம் சரியாக இல்லாததாலும், தவறான திட்டங்கள் மற்றும் அணுகுமுறைகளின் விளைவாகவும் அந்த அணியால் ஒருமுறை கூட கோப்பையை வெல்ல முடியவில்லை. 

ஐபிஎல் 13வது சீசன் தொடங்கவுள்ள நிலையில், ஆர்சிபி அணி, டுவிட்டர், ஃபேஸ்புக் மற்றும் இன்ஸ்டாகிராம் ஆகிய சமூக வலைதள பக்கங்களில், ராயல் சேலஞ்சர்ஸ் பெங்களூர் என்ற பெயரை வெறும் ராயல் சேலஞ்சர்ஸ் என்று மாற்றியிருப்பதோடு, பழைய ப்ரொஃபைல் படம் மற்றும் கவர் படம் ஆகியவற்றையும் நீக்கிவிட்டு மாற்றியுள்ளது. 

எனவே ஆர்சிபி அணி அடுத்த சீசனுக்கு முன், அணியின் பெயரையும் லோகோவையும் மாற்றவுள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளன. அதனால்தான் பழைய பெயரையும் லோகோவையும் சமூக வலைதள பக்கங்களில் இருந்து நீக்கியிருப்பதாக தகவல்கள் வெளியாகியுள்ளன. 

Also Read - கடைசி பந்தில் தென்னாப்பிரிக்கா த்ரில் வெற்றி.. பரபரப்பான டி20 போட்டியில் பட்டைய கிளப்பிய இங்கிடி

ஆனால் ஆர்சிபி அணி, சமூக வலைதள பக்கங்களில் இருந்து பெயர், படங்கள், லோகோவை நீக்குவதற்கு முன்பாக, அந்த அணியின் கேப்டன் கோலியிடம் கூட இதுகுறித்து தெரிவிக்கவில்லை. எனவே திடீரென ஆர்சிபி அணியின் இந்த செயலைக்கண்டு அதிர்ச்சியடைந்த கோலி, டுவிட்டர் பக்க பதிவுகள் எதையுமே காணவில்லை. கேப்டனிடம் கூட சொல்லவில்லையே.. ஏதாவது உதவி வேண்டுமென்றால் சொல்லுங்கள் என்று டுவிட்டரில் பதிவிட்டுள்ளார். இதன்மூலம் கோலியிடம் கூட ஆர்சிபி அணி நிர்வாகம் தெரிவிக்கவில்லை என்பது தெரிகிறது.

அதேபோல, பதிவுகள் நீக்கப்பட்டு, பெயர் மற்றும் படங்கள் மாற்றப்பட்டதை கண்ட ஆர்சிபி அணி வீரர் சாஹல், என்ன கூக்ளி இது..? ப்ரொஃபைல் படம், இன்ஸ்டாகிராம் பதிவுகள் எல்லாம் எங்கே என பதிவிட்டுள்ளார். 

ஆர்சிபி அணியின் சமூக வலைதள பதிவுகள் எல்லாம் எங்கே..? என்ன ஆனது? இது ஏதோ புதிய திட்டம் போல இருக்கிறது என்று டிவில்லியர்ஸ் பதிவிட்டுள்ளார்.