ஐபிஎல் 15வது சீசனுக்கான ஆர்சிபி அணியின் சிறந்த ஆடும் லெவன் காம்பினேஷனை பார்ப்போம்.
ஐபிஎல் 15வது சீசனில் லக்னோ சூப்பர் ஜெயிண்ட்ஸ் மற்றும் குஜராத் டைட்டன்ஸ் ஆகிய 2 அணிகளும் புதிதாக களமிறங்குவதால், இந்த சீசனில் 10 அணிகள் ஆடுகின்றன. எனவே இந்த சீசனுக்கான மெகா ஏலமாக நடந்தது.
மெகா ஏலத்தில் அனைத்து அணிகளும் தங்களுக்கு தேவையான வீரர்களை எடுத்தது. ஏலத்திற்கு முன்பாக விராட் கோலி, முகமது சிராஜ் மற்றும் மேக்ஸ்வெல் ஆகிய மூவரை மட்டுமே தக்கவைத்த ஆர்சிபி அணி, ஏலத்தில் டுப்ளெசிஸ், ஜோஷ் ஹேசில்வுட், வனிந்து ஹசரங்கா, ஹர்ஷல் படேல் ஆகிய நல்ல வீரர்களை ஏலத்தில் எடுத்தது.
விராட் கோலி கேப்டன்சியிலிருந்து விலகிவிட்டதால், அடுத்த கேப்டனாக யார் நியமிக்கப்படுவார் என்ற எதிர்பார்ப்பு நிலவுகிறது. விராட் கோலி கேப்டன்சியை ஏற்க ஆர்சிபி அணி நிர்வாகம் சார்பில் கோலியிடம் பேசிவருவதாக தெரிகிறது. அவர் ஏற்றுக்கொள்ளவில்லை என்றால், டுப்ளெசிஸ் அல்லது மேக்ஸ்வெல் ஆகிய இருவரில் ஒருவர் கேப்டன்சி செய்வார்.
15வது சீசனில் கோலி ஓபனிங்கில் இறங்குவார். அவரது ஓபனிங் பார்ட்னராக ஃபாஃப் டுப்ளெசிஸும் இறங்குவார்கள். 3, 4 ஆகிய வரிசைகளில் மேக்ஸ்வெல் மற்றும் மஹிபால் லோம்ரார் ஆகிய இருவரும் ஆடுவார்கள். விக்கெட் கீப்பர் தினேஷ் கார்த்திக். 6ம் வரிசையில் அனுஜ் ராவத் ஆடுவார். ஸ்பின்னர்களாக வனிந்து ஹசரங்கா மற்றும் ஷபாஸ் அகமது ஆகிய இருவரும், ஃபாஸ்ட் பவுலர்களாக ஹர்ஷல் படேல், ஜோஷ் ஹேசில்வுட், முகமது சிராஜ் ஆகிய மூவரும் ஆடுவார்கள்.
ஆர்சிபி அணியின் உத்தேச ஆடும் லெவன்:
விராட் கோலி, ஃபாஃப் டுப்ளெசிஸ், க்ளென் மேக்ஸ்வெல், மஹிபால் லோம்ரார், தினேஷ் கார்த்திக் (விக்கெட் கீப்பர்), அனுஜ் ராவத், வனிந்து ஹசரங்கா, ஷபாஸ் அகமது, ஹர்ஷல் படேல், ஜோஷ் ஹேசில்வுட், முகமது சிராஜ்.
