Asianet News TamilAsianet News Tamil

RCB vs PBKS:முக்கியமான போட்டியில் வெற்றி கட்டாயத்தில் RCB - PBKS பலப்பரீட்சை.! இரு அணிகளின் உத்தேச ஆடும் லெவன்

ஆர்சிபி - பஞ்சாப் கிங்ஸ் அணிகளுக்கு இடையேயான இன்றைய போட்டியில் களமிறங்கும் இரு அணிகளின் உத்தேச ஆடும் லெவனை பார்ப்போம்.
 

rcb and pbks probable playing eleven for today match in ipl 2022
Author
Mumbai, First Published May 13, 2022, 2:36 PM IST

ஐபிஎல் 15வது சீசன் லீக் சுற்றின் இறுதிக்கட்டத்தை எட்டியுள்ளது. லீக் சுற்றில் இன்னும் சில போட்டிகளே எஞ்சியுள்ளன. 

குஜராத் டைட்டன்ஸ் அணி முதல் அணியாக பிளே ஆஃபிற்கு முன்னேறிவிட்ட நிலையில், லக்னோ அணியும் பிளே ஆஃபிற்கு முன்னேறிவிடும். மும்பை இந்தியன்ஸ் மற்றும் சிஎஸ்கே அணிகள் தொடரை விட்டு வெளியேறிவிட்டன.

எனவே எஞ்சிய 2 இடங்களுக்கு ராஜஸ்தான் ராயல்ஸ், டெல்லி கேபிடள்ஸ், ஆர்சிபி, பஞ்சாப் கிங்ஸ், கேகேஆர் அணிகளுக்கு இடையே கடும் போட்டி நிலவுகிறது. இனிவரும் ஒவ்வொரு போட்டியுமே இந்த அணிகளுக்கு மிக முக்கியமானவை. 


அந்தவகையில், இந்த அணிகள் அடுத்தடுத்து வெற்றிகளை எதிர்நோக்கியுள்ள நிலையில், இன்றைய போட்டியில் ஆர்சிபி மற்றும் பஞ்சாப் கிங்ஸ் அணிகள் மோதுகின்றன. ஆர்சிபி அணி 12 போட்டிகளில் 7 வெற்றிகளுடன் 14 புள்ளிகளை பெற்று புள்ளி பட்டியலில் 4ம் இடத்தில் உள்ளது. பஞ்சாப் கிங்ஸ் அணி 11 போட்டிகளில் 5 வெற்றிகளுடன் 10 புள்ளிகளை பெற்றுள்ளது. எனவே இரு அணிகளுமே பிளே ஆஃபிற்கு முன்னேற வேண்டுமென்றால் இந்த போட்டியில் கண்டிப்பாக வெற்றி பெற்றே தீர வேண்டிய கட்டாயத்தில் மோதுகின்றன.

மும்பை ப்ரபோர்ன் ஸ்டேடியத்தில் நடக்கும் இந்த போட்டியில் களமிறங்கும் இரு அணிகளின் உத்தேச ஆடும் லெவனை பார்ப்போம்.

உத்தேச ஆர்சிபி அணி:

விராட் கோலி, ஃபாஃப் டுப்ளெசிஸ் (கேப்டன்), ரஜாத் பட்டிதார், க்ளென் மேக்ஸ்வெல், தினேஷ் கார்த்திக் (விக்கெட் கீப்பர்), மஹிபால் லோம்ரார், ஷபாஸ் அகமது, வனிந்து ஹசரங்கா, ஹர்ஷல் படேல், முகமது சிராஜ், ஜோஷ் ஹேசில்வுட்.

உத்தேச பஞ்சாப் கிங்ஸ் அணி:

ஜானி பேர்ஸ்டோ, ஷிகர் தவான், பானுகா ராஜபக்சா, மயன்க் அகர்வால் (கேப்டன்), ஜித்தேஷ் ஷர்மா (விக்கெட் கீப்பர்), லியாம் லிவிங்ஸ்டோன், ரிஷி தவான், ககிசோ ரபாடா, ராகுல் சாஹர், அர்ஷ்தீப் சிங், சந்தீப் ஷர்மா.
 

Follow Us:
Download App:
  • android
  • ios