Asianet News TamilAsianet News Tamil

#ICCWTC ஃபைனல்: வெறும் 46 ரன்.. மிகப்பெரிய லெஜண்ட் ஆல்ரவுண்டர்களின் பட்டியலில் இணையும் ஜடேஜா

ஐசிசி உலக டெஸ்ட் சாம்பியன்ஷிப் ஃபைனலில் வெறும் 46 ரன்கள் அடித்தால் மிகப்பெரிய லெஜண்ட் ஆல்ரவுண்டர்களின் பட்டியலில் ரவீந்திர ஜடேஜா இணையவுள்ளார்.
 

ravindra jadeja will join legend all rounders list if he score 46 runs in icc world test championship final
Author
Southampton, First Published Jun 16, 2021, 10:14 PM IST

இந்திய அணியின் ஸ்பின் ஆல்ரவுண்டர் ரவீந்திர ஜடேஜா, சமகாலத்தின் சிறந்த ஆல்ரவுண்டராக மட்டும் திகழாமல் ஆல்டைம் பெஸ்ட் ஆல்ரவுண்டர்களில் ஒருவராக திகழ்கிறார்.

ஜடேஜாவின் பேட்டிங் கடந்த 2 ஆண்டுகளில் வேற லெவலில் மேம்பட்டுள்ளது. பவுலிங், ஃபீல்டிங்குடன் சேர்த்து பேட்டிங்கிலும் பெரிய மேட்ச் வின்னராக ஜொலிக்கிறார்.

ravindra jadeja will join legend all rounders list if he score 46 runs in icc world test championship final

இதுவரை 51 டெஸ்ட் போட்டிகளில் ஆடி 1954 ரன்களை அடித்துள்ள ஜடேஜா, 220 விக்கெட்டுகளை வீழ்த்தியுள்ளார். டெஸ்ட் சாம்பியன்ஷிப் ஃபைனலில் 46 ரன்கள் அடித்தால், டெஸ்ட் கிரிக்கெட்டில் 2000 ரன்கள், 200 விக்கெட்டுகள் என்ற மைல்கல்லை எட்டிய 5வது இந்திய வீரர் என்ற சாதனையை படைப்பார். இதற்கு முன் கபில் தேவ், அனில் கும்ப்ளே, ஹர்பஜன் சிங், ரவிச்சந்திரன் அஷ்வின் ஆகிய 4 வீரர்கள் மட்டுமே இந்த சாதனையை செய்துள்ளனர்.

மேலும், அதை டெஸ்ட் சாம்பியன்ஷிப் ஃபைனலிலேயே செய்யும்பட்சத்தில், இந்த சாதனையை விரைவில் படைத்த 4வது வீரர் என்ற சாதனையை படைப்பார். டெஸ்ட் சாம்பியன்ஷிப் ஃபைனலில் 46 ரன்கள் அடித்தால், 52வது போட்டியில் இந்த மைல்கல்லை எட்டிய வீரர் என்ற சாதனையை ஜடேஜா படைப்பார். இயன் போத்தம் 42 போட்டிகளிலும், கபில் தேவ் மற்றும் இம்ரான் கான் ஆகிய இருவரும் தலா 50 போட்டிகளிலும், அஷ்வின் 51 போட்டிகளிலும் இந்த மைல்கல்லை எட்டினர்.
 

Follow Us:
Download App:
  • android
  • ios