Asianet News TamilAsianet News Tamil

IND vs NZ க்ளீன் போல்டுக்கு ரிவியூ எடுத்த அஷ்வின்..! சிரிப்பாய் சிரிக்கும் நெட்டிசன்கள்.. வைரல் வீடியோ

நியூசிலாந்துக்கு எதிரான 2வது டெஸ்ட் போட்டியின் முதல் இன்னிங்ஸில் க்ளீன் போல்டான அஷ்வின், அம்பயர் அவுட் கொடுத்ததும், அவர் எதற்கு அவுட் கொடுத்தார் என்பதே தெரியாமல் ரிவியூ எடுத்த வீடியோ சமூக வலைதளங்களில் வைரலாகிவருகிறது.
 

ravichandran ashwin takes review for clean bowled in second test against new zealand viral video
Author
Mumbai, First Published Dec 4, 2021, 5:52 PM IST

இந்தியா - நியூசிலாந்து இடையேயான 2வது டெஸ்ட் போட்டி நேற்று (டிசம்பர் 3) மும்பை வான்கடேவில் தொடங்கி நடந்துவருகிறது. இந்த போட்டியில் டாஸ் வென்று முதலில் பேட்டிங் ஆடிய இந்திய அணி, மயன்க் அகர்வாலின் அபார சதம் (150), அக்ஸர் படேலின் பொறுப்பான அரைசதம் (52) மற்றும் ஷுப்மன் கில் (44), ரிதிமான் சஹா (27) ஆகியோரின் பங்களிப்பால் முதல் இன்னிங்ஸில் 325 ரன்கள் அடித்தது இந்திய அணி.

இந்த இன்னிங்ஸில் இந்திய அணியின் அனைத்து விக்கெட்டுகளையுமே நியூசிலாந்தின் இடது கை ஸ்பின்னர் அஜாஸ் படேல் தான் வீழ்த்தினார். இதன்மூலம், டெஸ்ட் கிரிக்கெட்டில் ஒரே இன்னிங்ஸில் 10 விக்கெட் வீழ்த்திய ஜிம் லேக்கர் (1956) மற்றும் அனில் கும்ப்ளேவிற்கு (1999) அடுத்த 3வது பவுலர் என்ற சாதனையை படைத்தார் அஜாஸ் படேல். இந்திய அணிக்கு எதிராக ஒரே இன்னிங்ஸில் 10 விக்கெட் வீழ்த்திய ஒரே பவுலர் அஜாஸ் படேல் தான்.

இதையடுத்து முதல் இன்னிங்ஸை ஆடிய நியூசிலாந்து அணி முதல் இன்னிங்ஸில் வெறும் 62 ரன்களுக்கு ஆல் அவுட்டாக, 263 ரன்கள் முன்னிலையுடன் 2வது இன்னிங்ஸை ஆடிவரும் இந்திய அணி, 2ம் நாள் ஆட்ட முடிவில் விக்கெட் இழப்பின்றி 69 ரன்கள் அடித்துள்ளது.

முதல் இன்னிங்ஸில் ஒரே ஓவரில் ரிதிமான் சஹா மற்றும் அஷ்வின் ஆகிய இருவரையும் வீழ்த்தினார். இன்றைய ஆட்டம் தொடங்கிய சிறிது நேரத்திலேயே இன்னிங்ஸின் 72வது ஓவரில் ரிதிமான் சஹாவை வீழ்த்தினார் அஜாஸ் படேல். சஹா அவுட்டானதற்கு அடுத்த பந்திலேயே அஷ்வினை க்ளீன் போல்டாக்கினார் அஜாஸ் படேல்.

பந்து ஸ்டம்ப்பில் அடித்ததும் நியூசிலாந்து வீரர்கள் அதை கொண்டாட, அம்பயர் அவுட்கொடுத்தார். ஆனால் பந்து ஸ்டம்ப்பில் அடித்ததை கவனிக்காத அஷ்வின், வேறு எதற்காகவோத்தான் (எல்பிடபிள்யூ அல்லது விக்கெட் கீப்பிங் கேட்ச்) அம்பயர் அவுட்கொடுத்தார் என நினைத்து ரிவியூ செய்தார். பின்னர் போல்டு என்பதை தெரிவித்ததும் நடையை கட்டினார் அஷ்வின்.

க்ளீன் போல்டுக்கு அஷ்வின் ரிவியூ செய்த வீடியோ சமூக வலைதளங்களில் வைரலாகிவருகிறது. ரசிகர்கள் அதை கிண்டலடித்து வருகின்றனர்.
 

Follow Us:
Download App:
  • android
  • ios