Asianet News TamilAsianet News Tamil

#ICCWTC கோலி அப்படி சொல்லவே இல்ல.. அஷ்வின் விளக்கம்

ஐசிசி டெஸ்ட் சாம்பியன்ஷிப்பில் 3 இறுதிப்போட்டிகள் நடத்த வேண்டும் என்று கோலி கூறவேயில்லை என்று ரவிச்சந்திரன் அஷ்வின் தெரிவித்துள்ளார்.
 

ravichandran ashwin says that kohli did not asked for 3 matches to decide the winner of icc wtc title
Author
England, First Published Jul 3, 2021, 7:31 PM IST

ஐசிசி உலக டெஸ்ட் சாம்பியன்ஷிப் ஃபைனல் இங்கிலாந்தின் சவுத்தாம்ப்டன் நகரில் நடந்தது. இந்தியா - நியூசிலாந்து அணிகள் மோதிய அந்த இறுதிப்போட்டியில் 8 விக்கெட் வித்தியாசத்தில் இந்தியாவை வீழ்த்தி நியூசிலாந்து அணி அபார வெற்றி பெற்றது.

ஐசிசி டெஸ்ட் சாம்பியன்ஷிப்புக்கு ஒரேயொரு ஃபைனல் நடத்துவது சரியாக இருக்காது. குறைந்தது 3 போட்டிகள் நடத்தி வெற்றியாளரை தீர்மானிக்க வேண்டும் என்று வலியுறுத்தல்கள் எழுந்தன.

ravichandran ashwin says that kohli did not asked for 3 matches to decide the winner of icc wtc title

அந்த போட்டிக்கு பின்னர் பேசிய விராட் கோலியிடம் வர்ணனையாளர் மைக்கேல் ஆதெர்டான்,  நீங்கள்(கோலி) என்ன வித்தியாசமாக செய்திருக்கலாம் என்று நினைக்கிறீர்கல் என்று கேள்வியெழுப்பினார். அதற்கு பதிலளித்த கோலி, 3 போட்டிகள் ஆடியிருந்தால், கண்டிஷனுக்கு ஏற்ப தகவமைத்துக்கொண்டு, அடுத்த போட்டிகளில் கம்பேக் கொடுக்க முடியும். இது ஒரேயொரு போட்டி ஒன்றும் செய்யமுடியாது என்று பதிலளிருந்திருந்தார்.

ஆனால் விராட் கோலி 3 இறுதி போட்டிகள் நடத்த வேண்டும் எண்று கோரியதாக தகவல் பரவியது. இந்நிலையில், விராட் கோலி கூறியதை தெளிவாக எடுத்துக்கூறி, கோலி 3 ஃபைனல்கள் எல்லாம் கேட்கவில்லை என்று ரவிச்சந்திரன் அஷ்வின் தெளிவுபடுத்தியுள்ளார்.
 

Follow Us:
Download App:
  • android
  • ios