Asianet News TamilAsianet News Tamil

IND vs NZ டெஸ்ட் கிரிக்கெட்டில் 3 மிகப்பெரிய சாதனைகளை தகர்க்கப்போகும் அஷ்வின்..!

நியூசிலாந்துக்கு எதிரான 2வது டெஸ்ட் போட்டியில், ரவிச்சந்திரன் அஷ்வின் டெஸ்ட் கிரிக்கெட்டில் படைக்க வாய்ப்புள்ள சில சாதனைகளை பார்ப்போம்.
 

ravichandran ashwin is closing in on 3 huge milestones in test cricket in the second test match against new zealand
Author
Mumbai, First Published Dec 2, 2021, 9:31 PM IST

சமகாலத்தின் சிறந்த ஸ்பின்னர்களில் ஒருவர் ரவிச்சந்திரன் அஷ்வின். இந்திய அணிக்காக 2011ம் ஆண்டிலிருந்து டெஸ்ட் கிரிக்கெட்டில் ஆடிவரும் அஷ்வின், டெஸ்ட் அணியின் நம்பர் 1 ஸ்பின்னராக திகழ்கிறார்.

10 ஆண்டுகளாக அபாரமாக பந்துவீசிவரும் அஷ்வின், அதிவேக 250, 300, 350 விக்கெட்டுகள் வீழ்த்திய பவுலர் என்ற சாதனைக்கு சொந்தக்காரரான அஷ்வின், 79 சர்வதேச டெஸ்ட் போட்டிகளில் ஆடி 413 விக்கெட்டுகளை வீழ்த்தியிருந்தார். 

நியூசிலாந்துக்கு எதிரான முதல் டெஸ்ட் அவரது 80வது சர்வதேச டெஸ்ட் போட்டி. அந்த போட்டியில் இரு இன்னிங்ஸ்களிலும் தலா 3 விக்கெட்டுகளை வீழ்த்தி, அந்த போட்டியில் 6 விக்கெட்டுகளை வீழ்த்திய அஷ்வின், 419 விக்கெட்டுகளுடன் டெஸ்ட் கிரிக்கெட்டில் அதிக விக்கெட் வீழ்த்திய 3வது இந்திய பவுலர் என்ற சாதனையை படைத்தார். 

ஹர்பஜன் சிங் 190 டெஸ்ட் இன்னிங்ஸ்களில் 417 விக்கெட்டுகளை வீழ்த்தியுள்ளார். அஷ்வின் 150 இன்னிங்ஸ்களில் 419 விக்கெட்டுகள் வீழ்த்தி, ஹர்பஜன் சிங்கை பின்னுக்குத்தள்ளி டெஸ்ட் கிரிக்கெட்டில் அதிக விக்கெட் வீழ்த்திய பவுலர்களில் அனில் கும்ப்ளே (619), கபில் தேவ் (434) ஆகிய இருவருக்கு அடுத்த 3ம் இடத்தை பிடித்து சாதனை படைத்திருந்தார்.

இந்நிலையில், நியூசிலாந்துக்கு எதிரான 2வது டெஸ்ட்டில் 3 பெரிய மைல்கற்களை எட்டவுள்ளார்.

1. 2021ம் ஆண்டில் இதுவரை 14 இன்னிங்ஸ்களில் 44 விக்கெட் வீழ்த்தியுள்ள அஷ்வின், இன்னும் 6 விக்கெட் வீழ்த்தினால் இந்த ஆண்டில் அதிக விக்கெட் வீழ்த்திய பவுலராக திகழ்வார். இந்த ஆண்டு அதிக விக்கெட்வீழ்த்தினால், 4வது முறையாக ஓராண்டில் அதிக விக்கெட் வீழ்த்திய இந்திய பவுலர் என்ற சாதனையை படைப்பார். இதற்கு முன் அனில் கும்ப்ளே மற்றும் ஹர்பஜன் சிங் ஆகிய இருவரும் தலா 3 முறை ஓராண்டில் அதிக விக்கெட் வீழ்த்தியிருக்கின்றனர். அஷ்வினும் இதுவரை 3 முறை ஓராண்டில் அதிக விக்கெட் வீழ்த்திய பவுலராக இருந்துள்ள நிலையில், இன்னும் 6 விக்கெட் வீழ்த்தினால், 4வது முறையாக இந்த சாதனையை படைத்த இந்திய பவுலர் என்ற மைல்கல்லை எட்டுவார்.

2. அஷ்வின் 2வது டெஸ்ட்டில் 8 விக்கெட் வீழ்த்தினால், சொந்த மண்ணில் டெஸ்ட் கிரிக்கெட்டில் 300 விக்கெட் வீழ்த்திய 2வது இந்திய பவுலர் என்ற சாதனையை படைப்பார். இதற்கு முன் அனில் கும்ப்ளே மட்டுமே இந்திய மண்ணில் 300 டெஸ்ட் விக்கெட்டுகளை வீழ்த்தியிருக்கிறார்.

3. அஷ்வின் சென்னை சேப்பாக்கம் மற்றும் மும்பை வான்கடே ஆகிய 2 மைதானங்களிலும் தலா 30 விக்கெட்டுகளை வீழ்த்தியுள்ளார். மும்பையில் நடக்கும் 2வது டெஸ்ட்டில் ஒரு விக்கெட் வீழ்த்தினால், ஒரு மைதானத்தில்  அதிக விக்கெட் வீழ்த்திய பவுலர் என்ற சாதனையை படைப்பார்.
 

Follow Us:
Download App:
  • android
  • ios