Asianet News TamilAsianet News Tamil

T20 World Cup: கோலி - ராகுல் யார் தொடக்க வீரராக இறங்கவேண்டும்.? முன்னாள் ஹெட்கோச் ரவி சாஸ்திரி கருத்து

டி20 உலக கோப்பையில் ரோஹித்துடன் யார் தொடக்க வீரராக இறங்க வேண்டும் என்று முன்னாள் தலைமை பயிற்சியாளர் ரவி சாஸ்திரி கருத்து கூறியுள்ளார்.
 

ravi shastri picks opening partner of rohit sharma for india in t20 world cup
Author
First Published Sep 24, 2022, 5:46 PM IST

டி20 உலக கோப்பை நெருங்கும் நிலையில், இந்திய அணியின் ஆடும் லெவன் காம்பினேஷன் கிட்டத்தட்ட உறுதியாகிவிட்டது. விக்கெட் கீப்பராக யாரை இறக்குவது என்பது மட்டுமே இன்னும் உறுதியாகாமல் உள்ளது. 

ரிஷப் பண்ட்டை விட தினேஷ் கார்த்திக்கிற்கு முன்னுரிமை கொடுக்கப்பட்டுவரும் நிலையில், ஆஸி.,க்கு எதிரான 2வது டி20யில் கடைசி ஓவரில் சிக்ஸரும் பவுண்டரியும் அடித்து போட்டியை முடித்து கொடுத்தார். தினேஷ் கார்த்திக் அவருக்கான இடத்தை பிடித்துவிட்டாலும், ரிஷப் - டிகே இருவரில் யார் என்பது நிச்சயமில்லை.

இதையும் படிங்க - T20 World Cup:ரிஷப் பண்ட் - தினேஷ் கார்த்திக் இந்திய அணியில் யாருக்கு இடம்? கவாஸ்கர் - ஹைடன் முரண்பட்ட கருத்து

அதேபோலவே ரோஹித்துடன் கோலி - ராகுல் ஆகிய இருவரில் யார் தொடக்க வீரராக இறங்குவது என்பது குறித்தும் ஒரு விவாதம் நடந்துவருகிறது. டி20 கிரிக்கெட்டில் கோலி ஓபனிங்கில் அபாரமாக பேட்டிங் ஆடியிருக்கிறார். காயத்திலிருந்து மீண்டு வந்த ராகுல் அவரது ஃப்ளோவிற்கு வரவில்லை. எனவே டி20 உலக கோப்பையில் ரோஹித்துடன் கோலி ஓபனிங்கில் இறங்கலாம் என்ற கருத்து நிலவுகிறது.

கேப்டன் ரோஹித் சர்மாவே, ராகுல் தான் முதன்மை தொடக்க வீரர் என்பதை உறுதி செய்துவிட்டார். ஆனாலும் இதுகுறித்த விவாதமும் கேள்விகளும் தொடர்ந்து வருகிறது.

இதையும் படிங்க - IND vs AUS: ரிஷப் பண்ட்டுக்கு முன் தினேஷ் கார்த்திக்கை இறக்கிவிட்டது ஏன்..? கேப்டன் ரோஹித் சர்மா விளக்கம்

இந்நிலையில், இதுகுறித்து பேசிய ரவி சாஸ்திரி, ரோஹித்துடன் ராகுல் தான் தொடக்க வீரராக இறங்கவேண்டும். காயம் அல்லது ஏதேனும் அவசரம் என்றால் மட்டுமே தொடக்க ஜோடியில் மாற்றம் செய்யவேண்டும். மிடில் ஆர்டர் டெப்த் முக்கியம். விராட் கோலி எவ்வளவு முக்கியமான வீரர் என்பது நமக்கு தெரியும். கோலி டாப் ஆர்டரில் அருமையாக ஆடிக்கொண்டிருக்கிறார். அப்படியிருக்கையில், அவரை மாற்ற வேண்டும் என்ற சிந்தனையே ஏன் வருகிறது.? இந்த மாதிரியான விவாதங்கள் செய்து ராகுலை குழப்பக்கூடாது. தெளிவான மனநிலையில் இருந்தால்தான் அவரால் நன்றாக ஆடமுடியும் என்று ரவி சாஸ்திரி கருத்து கூறியுள்ளார்.
 

Follow Us:
Download App:
  • android
  • ios