Asianet News TamilAsianet News Tamil

சச்சின் டெண்டுல்கரின் 100 சத சாதனையை விராட் கோலி முறியடிப்பாரா..? மாட்டாரா..? ரவி சாஸ்திரி கருத்து

சச்சின் டெண்டுல்கரின் 100 சத சாதனையை விராட் கோலி முறியடிப்பாரா என்று பரபரப்பாக பேசப்பட்டுவரும் நிலையில், இதுகுறித்த தனது கருத்தை கூறியுள்ளார் ரவி சாஸ்திரி.
 

ravi shastri opines that not an easy thing that virat kohli break sachin tendulkar 100 centuries record in international cricket
Author
First Published Mar 27, 2023, 3:41 PM IST

சமகாலத்தின் தலைசிறந்த வீரர்களில் ஒருவரான விராட் கோலி, சர்வதேச கிரிக்கெட்டில் சதங்களையும் சாதனைகளையும் குவித்துவந்த நிலையில், 2019ம் ஆண்டு நவம்பருக்கு பின் சுமார் 3 ஆண்டுகளாக சதமே அடிக்காமல் இருந்துவந்தார்.

3 ஆண்டுகளுக்கு பிறகு, கடந்த ஆண்டு நடந்த ஆசிய கோப்பையில் ஆஃப்கானிஸ்தானுக்கு எதிராக சதமடித்து மீண்டும் சத கணக்கை தொடங்கிய விராட் கோலி, அதன்பின்னர் ஒருநாள் போட்டியிலும் சதமடித்தார். ஆனால் டெஸ்ட் கிரிக்கெட்டில் மட்டும் சதமடிக்காமல் இருந்துவந்த நிலையில், ஆஸ்திரேலியாவிற்கு எதிராக அகமதாபாத்தில் நடந்த கடைசி டெஸ்ட்டில் சதமடித்து அந்த குறையையும் தீர்த்தார். 186 ரன்களை குவித்து அசத்தினார்.

இந்தூர் பிட்ச் படுமட்டம்லாம் இல்ல.. தீர்ப்பை திருத்தி எழுதிய ஐசிசி.! பிசிசிஐ-யின் அப்பீலுக்கு கிடைத்த வெற்றி

இந்த சதத்தின் மூலம் சச்சின் டெண்டுல்கர், பிரயன் லாரா உள்ளிட்ட பல ஜாம்பவான்களின் சாதனைகளை தகர்த்தார். விராட் கோலி மீண்டும் சதங்களையும் சாதனைகளையும் குவிக்க தொடங்கிவிட்டார்.

சர்வதேச கிரிக்கெட்டில் டெஸ்ட்டில் 28 சதங்கள், ஒருநாள் போட்டிகளில் 46 சதங்கள் மற்றும் டி20யில் ஒரு சதம் என மொத்தமாக 75 சதங்களை விளாசி 2ம் இடத்தில் உள்ள விராட் கோலி, சச்சின் டெண்டுல்கர் 100 சதங்கள் என்ற சாதனையை தகர்ப்பாரா மாட்டாரா என்று பேசப்பட்டுவரும் நிலையில்,  இதுகுறித்து ரவி சாஸ்திரி கருத்து கூறியுள்ளார்.

டி காக் சதம்; தென்னாப்பிரிக்கா காட்டுத்தனமான பேட்டிங்! டி20-யில் மிகப்பெரிய ரன் சேஸிங்கை செய்து வரலாற்று சாதனை

இதுகுறித்து பேசிய ரவி சாஸ்திரி, எத்தனை வீரர்கள் 100 சதங்கள் அடித்திருக்கிறார்கள்..? ஒரேயொருவர் தான். எனவே அந்த சாதனையை முறியடிப்பது என்பது சாதாரண விஷயமல்ல; மிகப்பெரிய விஷயம். ஆனால் கோலி இன்னும் நிறைய கிரிக்கெட் ஆடுவார். செம ஃபிட்டாகவும் இருக்கிறார். கோலி மாதிரி கிளாஸான வீரர் சதங்களை அடிக்க தொடங்கிவிட்டால் அடுத்தடுத்து அடித்துக்கொண்டே இருப்பார். கோலி இன்னும் 5-6 ஆண்டுகள் கண்டிப்பாக ஆடுவார். ஆனாலும் 100 சதங்கள் என்பது மிகப்பெரிய மைல்கல் என்பதால் அதை முறியடிப்பது சற்று கடினமானதே என்று ரவி சாஸ்திரி தெரிவித்தார்.
 

Follow Us:
Download App:
  • android
  • ios