Asianet News TamilAsianet News Tamil

அஷ்வின் ஓரங்கட்டப்பட்டது ஏன்..? சாஸ்திரி அதிரடி விளக்கம்

வெஸ்ட் இண்டீஸுக்கு எதிராக நல்ல ரெக்கார்டை வைத்திருந்தும் கூட, இரண்டு டெஸ்ட் போட்டிகளிலும் அஷ்வின் புறக்கணிக்கப்பட்டார். இந்நிலையில், அஷ்வினுக்கு பதிலாக ஜடேஜா சேர்க்கப்பட்டது குறித்து தலைமை பயிற்சியாளர் ரவி சாஸ்திரி விளக்கமளித்துள்ளார். 
 
ravi shastri explained why jadeja selected over ashwin in test series against west indies
Author
West Indies, First Published Sep 1, 2019, 4:41 PM IST

வெஸ்ட் இண்டீஸ் அணிக்கு எதிரான முதல் டெஸ்ட் போட்டியில் ஆடும் லெவனில் எடுக்கப்படாத அஷ்வின், இரண்டாவது போட்டியிலும் அணியில் எடுக்கப்படவில்லை. 

வெஸ்ட் இண்டீஸுக்கு எதிராக டெஸ்ட் கிரிக்கெட்டில் அபாரமான ரெக்கார்டை வைத்திருக்கும் அஷ்வினின் புறக்கணிப்பு முன்னாள் ஜாம்பவான்களுக்கே அதிர்ச்சிகரமானதாக அமைந்தது. 

முதல் டெஸ்ட் போட்டியில் வர்ணனை செய்துகொண்டிருந்த கவாஸ்கர், அஷ்வினின் புறக்கணிப்பு தனக்கு அதிர்ச்சியளித்ததாக தெரிவித்திருந்தார். வெஸ்ட் இண்டீஸுக்கு எதிராக நல்ல ரெக்கார்டு வைத்திருக்கும் அஷ்வினுக்கு ஆடும் லெவனில் இடமில்லை. எனக்கு அதிர்ச்சியாக இருக்கிறது என்று கவாஸ்கர் தெரிவித்திருந்தார். 

ravi shastri explained why jadeja selected over ashwin in test series against west indies

வெஸ்ட் இண்டீஸுக்கு எதிராக 11 டெஸ்ட் போட்டிகளில் ஆடி 60 விக்கெட்டுகளை வீழ்த்தியுள்ள அஷ்வின், பவுலிங்கில் மட்டுமல்லாமல் பேட்டிங்கிலும் அந்த அணிக்கு எதிராக அசத்தியுள்ளார். டெஸ்ட் போட்டியில் வெஸ்ட் இண்டீஸுக்கு எதிராக 4 சதங்களை விளாசியுள்ளார் என்பதும் கடந்த முறை இந்திய அணி வெஸ்ட் இண்டீஸிற்கு சுற்றுப்பயணம் சென்றபோது, அஷ்வின் தான் தொடர் நாயகன் என்பதும் குறிப்பிடத்தக்கது.

வெஸ்ட் இண்டீஸுக்கு எதிராக நல்ல ரெக்கார்டை வைத்திருந்தும் கூட, இரண்டு டெஸ்ட் போட்டிகளிலும் அஷ்வின் புறக்கணிக்கப்பட்டார். இந்நிலையில், அஷ்வினுக்கு பதிலாக ஜடேஜா சேர்க்கப்பட்டது குறித்து தலைமை பயிற்சியாளர் ரவி சாஸ்திரி விளக்கமளித்துள்ளார். 

ravi shastri explained why jadeja selected over ashwin in test series against west indies

இதுகுறித்து பேசிய ரவி சாஸ்திரி, ஜடேஜா எடுக்கப்பட்டதற்கு ஃபீல்டிங் தான் காரணம். பிட்ச் ஈரப்பதமாக இருந்ததால், ஜடேஜா வேகமாக வீசி பேட்ஸ்மேன்களை அச்சுறுத்துவார். அஷ்வின் மற்றும் குல்தீப் மாதிரியான வீரர்களை அணியில் எடுக்கமுடியாமல் போவது மிகவும் கடினமான முடிவுதான். ஆனால் ஜடேஜாவின் ரெக்கார்டையும் கருத்தில் கொள்ள வேண்டும். அவர் அபாரமான ஃபீல்டர். பேட்டிங்கிலும் தாறுமாறாக தனது திறமையை வளர்த்திருக்கிறார். இப்போதெல்லாம் அபாரமாக பேட்டிங் ஆடுகிறார். அதுமட்டுமல்லாமல் ஜமைக்காவின் ஆடுகளத்தை பார்த்தேன். இதில் ஸ்பின்னர்களுக்கு பெரிதாக வேலையில்லை. ஸ்பின் பவுலிங் எடுபடாது. எனவே இங்கு ஸ்பின்னர்களுக்கான முக்கியத்துவம் இல்லை என்பதால் தான் அஷ்வின் புறக்கணிக்கப்பட்டதாக தெரிவித்தார். 
 
Follow Us:
Download App:
  • android
  • ios