Asianet News TamilAsianet News Tamil

எடுபுடிகளை மட்டுமே எடுத்து வச்சுகிட்டா டீம் எப்படி வெளங்கும்..? 2 பேருமே ஒரு குட்டையில் ஊறுன மட்டைதான்

நன்றாக ஆடினாலும் ஆடாவிட்டாலும் ராகுலும் சாஹலும் தொடர்ந்து ஆடும் லெவனில் இடம்பெற்றுவருகின்றனர். ராகுல் உலக கோப்பைக்கு முன்பும் சரியாக ஆடவில்லை. ஆனாலும் அவர் அனைத்து போட்டிகளிலும் ஆடும் லெவனில் இடம்பெற்றிருந்தார். அதேபோல சாஹலும் சரியாக ஆடாவிட்டாலும் ஆடும் லெவனில் எப்போதுமே இருப்பார். 

ravi shastri and kohli preference their supporters in indian team
Author
England, First Published Jul 14, 2019, 12:42 PM IST

உலக கோப்பையை வெல்ல வாய்ப்புள்ள அணியாக பார்க்கப்பட்ட இந்திய அணி, அரையிறுதியில் நியூசிலாந்திடம் தோற்று வெளியேறியது. 

அரையிறுதியில் நியூசிலாந்து அணி நிர்ணயித்த 240 ரன்கள் என்ற இலக்கை விரட்ட முடியாமல் இந்திய அணி 18 ரன்கள் வித்தியாசத்தில் தோற்றது. இந்திய அணியின் சிக்கலாக இருந்துவந்த நான்காம் வரிசை வீரருக்காக நீண்ட தேடுதல் படலம் நடத்தியும் அதற்கு ஒரு தீர்வு காணப்படாமலேயே மிடில் ஆர்டர் சிக்கலுடனேயே உலக கோப்பைக்கு சென்றது. 

ravi shastri and kohli preference their supporters in indian team

அரையிறுதி போட்டியை தவிர மற்ற போட்டிகளில் டாப் ஆர்டர்கள் நன்றாக ஆடியதால் மிடில் ஆர்டர் பிரச்னை வெளியே தெரியாமல் இருந்தது. ஆனால் அரையிறுதியில் டாப் ஆர்டர்கள் சொதப்பியதால் மிடில் ஆர்டர் சிக்கல் தெரியவந்தது. அந்த போட்டியில் தோனியை ஐந்தாம் வரிசையில் இறக்காமல் ஏழாம் வரிசையில் இறக்கியது மிகப்பெரிய தவறாக அமைந்துவிட்டது. அதுவும் இந்திய அணியின் தோல்விக்கு ஒரு காரணமாக அமைந்துவிட்டது. 

ravi shastri and kohli preference their supporters in indian team

உலக கோப்பையில் இந்திய அணியின் தோல்விக்கு பிறகு அணி நிர்வாகத்திற்கு நெருக்கடி அதிகரித்திருக்கிறது. அணியை மறு ஆய்வு செய்வதற்கான நிர்வாகக்குழு தலைமையிலான கூட்டமும் நடைபெறவுள்ளது. 

அதுமட்டுமல்லாமல் தோல்விக்கு பிறகு பல தகவல்கள் வெளிவந்தன. கேப்டன் கோலியும் பயிற்சியாளர் ரவி சாஸ்திரியும் மற்ற சீனியர் வீரர்களுடன் கலந்தாலோசிக்காமல் தன்னிச்சையாக முடிவெடுப்பதால் அவர்கள் மீது அதிருப்தியில் இருக்கும் வீரர்கள், ரோஹித் தலைமையில் தனி கேங்காக செயல்படுகிறார்கள் என்று தெரிகிறது. கேப்டன் கோலி தனது பேச்சை கேட்டு நடக்கக்கூடிய தனது விசுவாசிகளுக்கு அணியில் முக்கியத்துவம் கொடுப்பதாக குற்றச்சாட்டு எழுந்துள்ளது. 

ravi shastri and kohli preference their supporters in indian team

அப்படித்தான், நன்றாக ஆடினாலும் ஆடாவிட்டாலும் ராகுலும் சாஹலும் தொடர்ந்து ஆடும் லெவனில் இடம்பெற்றுவருகின்றனர். ராகுல் உலக கோப்பைக்கு முன்பும் சரியாக ஆடவில்லை. ஆனாலும் அவர் அனைத்து போட்டிகளிலும் ஆடும் லெவனில் இடம்பெற்றிருந்தார். அதேபோல சாஹலும் சரியாக ஆடாவிட்டாலும் ஆடும் லெவனில் எப்போதுமே இருப்பார். கோலி கேப்டனாக இருக்கும் ஐபிஎல் அணியான ஆர்சிபியில் தான் சாஹல் ஆடுகிறார். எனவே கோலிக்கு நெருக்கமான சாஹல் அனைத்து போட்டிகளிலும் ஆடுவார். அவரை உட்காரவே வைக்கமாட்டார். அதேபோலத்தான் ராகுலும்.. எந்த போட்டியிலும் உட்காரவைக்கப்படவில்லை. அவர் சரியாக ஆடாதபோதிலும் அணியில் இருப்பார். 

ravi shastri and kohli preference their supporters in indian team

ரோஹித் பரிந்துரைக்கும் வீரர்களை கேப்டன் கோலியும் பயிற்சியாளர் சாஸ்திரியும் எடுப்பதில்லை என்ற தகவல் வெளிவந்துள்ளது. இவர்கள் கடந்த இரண்டு ஆண்டுகளாக தன்னிச்சையாக செயல்பட்டு பல அதிர்ச்சிகரமான முடிவுகளை எடுத்துள்ளனர். அவை எதுவுமே பலனளிக்காமல் போனதால் அந்த முடிவுகள் குறித்து மக்களிடம் விளக்கமளிக்க வேண்டும் என்று கவாஸ்கர் வலியுறுத்தியுள்ளார். 

ravi shastri and kohli preference their supporters in indian team

பெஸ்ட் பிளேயிங் லெவனுடன் ஆடுவது முக்கியம் என்று கருதாமல் தனது விசுவாசிகளை கேப்டன் கோலி எப்படி அணியில் எடுக்கிறாரோ, அதே தவறான விஷயத்தைத்தான் பயிற்சியாளர் ரவி சாஸ்திரியும் செய்தார். இந்திய அணியின் தலைமை பயிற்சியாளராக ரவி சாஸ்திரியை நியமிக்கும் போதே, வெளிநாட்டு தொடர்களுக்கு பேட்டிங் பயிற்சியாளராக ராகுல் டிராவிட்டையும் பவுலிங் பயிற்சியாளராக பரத் அருணையும், கிரிக்கெட் ஆலோசனை குழு(கங்குலி, சச்சின், லட்சுமணன்) பரிந்துரைத்தது. ஆனால் டிராவிட் என்ற ஜாம்பவானை வேண்டாம் என்று சொல்லிவிட்டு தனக்கு நெருங்கியவரும், பெரியளவில் சர்வதேச போட்டிகளில் ஆடாதவருமான சஞ்சய் பங்காரை பேட்டிங் பயிற்சியாளராகவும் பரத் அருணை பவுலிங் பயிற்சியாளராகவும் கேட்டு பெற்றுக்கொண்டார் சாஸ்திரி. 

ravi shastri and kohli preference their supporters in indian team

ராகுல் டிராவிட் போன்ற ஜாம்பவானை பக்கத்தில் வைத்திருப்பதால் தனது திறனும் திராணியும் அம்பலப்பட்டுவிடும் என்று கருதி, டிராவிட் என்ற ஜாம்பவானை வேண்டாம் என்று சொல்லிவிட்டு பங்காரை பெற்றார் சாஸ்திரி. அதன் விளைவுதான், பல பரிசோதனை முயற்சிகளை செய்தும் கூட கடைசி வரை நான்காம் வரிசை வீரரை கண்டே பிடிக்க முடியவில்லை. எத்தனையோ ஜாம்பவான்களை விட்டுவிட்டு, பங்காரை எடுத்ததன் விளைவு, நான்காம் வரிசை வீரரை கண்டுபிடிக்க முடியாததுடன் நின்றுவிட்டதா என்றால் இல்லை. 

ravi shastri and kohli preference their supporters in indian team

அவரால் தான் உலக கோப்பை தொடரிலிருந்து வெளியேறவே நேரிட்டது. நியூசிலாந்துக்கு எதிரான போட்டியில் 5 ரன்களுக்கு 3 விக்கெட்டுகளை இழந்து இந்திய அணி இக்கட்டான நிலையில் இருந்தபோது தோனியை இறக்காமல் தினேஷ் கார்த்திக்கை இறக்கியதும், அதன்பின்னர் பாண்டியாவை இறக்கியதும், தோனியை ஏழாம் வரிசைக்கு தள்ளியதும் பங்கார் தான் என்பது தெரியவந்துள்ளது. கேப்டனும் சரி, பயிற்சியாளரும் சரி, தங்களுக்கு வேண்டப்பட்டவர்களையும் தங்களது விசுவாசிகளையும் வைத்துக்கொள்ள வேண்டும் என்று நினைத்தால் அணி எப்படி வெளங்கும்..? அதுதான் இந்திய அணியின் விஷயத்தில் நடந்துள்ளது. 
 

Follow Us:
Download App:
  • android
  • ios