Asianet News TamilAsianet News Tamil

ஒருநாள் கிரிக்கெட்டில் இந்தியாவுக்கு எதிராக சிறந்த சராசரி: லெஜண்ட் வீரர்களின் வரிசையில் இணைந்த வாண்டர் டசன்

இந்தியாவிற்கு எதிராக ஒரு ஒருநாள் தொடரில் அதிக சராசரியை கொண்ட பேட்ஸ்மேன்கள் பட்டியலில் 3ம் இடத்தை பிடித்துள்ளார் தென்னாப்பிரிக்க வீரர் ராசி வாண்டர் டசன்.
 

Rassie van der Dussen joins AB de Villiers and Javed Miandad in a series record against India
Author
Cape Town, First Published Jan 23, 2022, 8:14 PM IST

இந்தியா - தென்னாப்பிரிக்கா இடையேயான 3 ஒருநாள் போட்டிகள் கொண்ட தொடரின் முதலிரண்டு போட்டிகளிலும் வெற்றி பெற்று தென்னாப்பிரிக்க அணி தொடரை வென்ற நிலையில் கடைசி போட்டி இன்று நடந்துவருகிறது. 

முதல் 2 போட்டிகளில் தென்னாப்பிரிக்க அணி வெற்றி பெற்றபோது, அந்த வெற்றியில் முக்கிய பங்காற்றியவர் ராசி வாண்டர் டசன். முதல் போட்டியில் 129 ரன்களை குவித்த வாண்டர் டசன், 2வது போட்டியில் 37 ரன்கள் அடித்து கடைசி வரை களத்தில் நின்று போட்டியை முடித்து கொடுத்தார்.

இன்று கேப்டவுனில் நடந்துவரும் 3வது ஒருநாள் போட்டியில் 70 ரன்களுக்கு தென்னாப்பிரிக்க அணி 3 விக்கெட்டுகளை இழந்து திணறிய நிலையில், டி காக்குடன் இணைந்து முக்கியமான பார்ட்னர்ஷிப்பை அமைத்தார் வாண்டர் டசன். டி காக் - டசன் ஜோடி 4வது விக்கெட்டுக்கு 144 ரன்களை குவித்தது. இந்த ஜோடியின் பங்களிப்புதான் அந்த அணி 287 ரன்கள் அடிக்க காரணம். வாண்டர் டசன் 52 ரன்கள் அடித்தார்.

எனவே இந்த தொடரில் மொத்தமாக 218 ரன்களை (129, 37*, 52) குவித்த வாண்டர் டசன், இந்தியாவிற்கு எதிராக ஒரு தொடரில் அதிக சராசரியை கொண்ட வீரர்கள் பட்டியலில் ஏபி டிவில்லியர்ஸ் மற்றும் ஜாவேத் மியான்தத்துக்கு அடுத்த இடத்தை பிடித்துள்ளார்.

இந்தியாவிற்கு எதிராக ஒரு ஒருநாள் தொடரில் அதிக சராசரியை கொண்ட வீரர்கள்:

ஏபி டிவில்லியர்ஸ் (தென்னாப்பிரிக்கா) - 241 ரன்கள் (3 போட்டிகள்)

ஜாவேத் மியான்தத் (பாகிஸ்தான்) - 234 ரன்கள் (4 போட்டிகள்)

வாண்டர் டசன் (தென்னாப்பிரிக்கா) - 218 ரன்கள் (3 போட்டிகள்)

ஜோ ரூட் (இங்கிலாந்து) - 216 ரன்கள் (3 போட்டிகள்)

ரோஸ் டெய்லர் (நியூசிலாந்து) - 194 ரன்கள் (3 போட்டிகள்)
 

Follow Us:
Download App:
  • android
  • ios