ஸ்டீவ் ஸ்மித்தை போல ரஷீத் கான் பேட்டிங் ஆடிய வீடியோவை சன்ரைசர்ஸ் ஹைதராபாத் அணி டுவிட்டரில் பகிர்ந்துள்ளது.  

21 வயதே ஆன ஆஃப்கானிஸ்தானின் இளம் வீரர் ரஷீத் கான், தன் கிரிக்கெட் கெரியரின் ஆரம்பத்திலேயே சர்வதேச அளவில் மிகப்பிரபலமடைந்துவிட்டார். ரிஸ்ட் ஸ்பின்னரான அவர், 16 வயதிலேயே ஆஃப்கானிஸ்தான் அணியில் அறிமுகமாகிவிட்டார். 

Add Asianetnews Tamil as a Preferred SourcegooglePreferred

2015ம் ஆண்டு ஆஃப்கானிஸ்தான் அணியில் அறிமுகமான ரஷீத் கான், 3 விதமான கிரிக்கெட் போட்டிகளிலும் நட்சத்திர வீரராக ஜொலித்துவருகிறார். இளம் வயதிலேயே, ஜாம்பவான் பேட்ஸ்மேன்களை எல்லாம் தனது சுழலின் மூலம் திணறடித்துவருகிறார். 

பவுலிங்கில் மட்டுமல்லாமல், பேட்டிங்கிலும் இக்கட்டான நேரத்தில் கைகொடுக்கக்கூடியவர் ரஷீத் கான். தரமான ஆல்ரவுண்டராக வலம் வருகிறார். ஆஃப்கானிஸ்தானை கடந்து, இந்தியா உட்பட உலகம் முழுதும் பெரும் ரசிகர் பட்டாளத்தை பெற்றிருக்கிறார் ரஷீத் கான். ஐபிஎல்லில் சன்ரைசர்ஸ் ஹைதராபாத் அணியில் ஆடிவரும் ரஷீத் கான், இதுவரை 46 ஐபிஎல் போட்டிகளில் ஆடி 55 விக்கெட்டுகளை வீழ்த்தியுள்ளார்.

இந்நிலையில், சமகால கிரிக்கெட்டின் தலைசிறந்த பேட்ஸ்மேன்களில் ஒருவரான ஸ்டீவ் ஸ்மித்தை போல தனது வீட்டில் பேட்டிங் ஆடியுள்ளார். ஸ்டீவ் ஸ்மித்துக்கு கடந்த 2ம் தேதி பிறந்தநாள். இதையொட்டி, ஸ்மித்தின் பேட்டிங் ஸ்டைலை பின்பற்றி, ரஷீத் கான் தனது வீட்டில் பேட்டிங் ஆடிய வீடியோவை சன்ரைசர்ஸ் ஹைதராபாத் அணி டுவிட்டரில் பகிர்ந்துள்ளது. 

Scroll to load tweet…

ஸ்டீவ் ஸ்மித் சமகால கிரிக்கெட்டின் சிறந்த பேட்ஸ்மேன்களில் ஒருவராக திகழ்கிறார். மரபார்ந்த பேட்டிங் ஸ்டைல் அல்லாத வித்தியாசமான பேட்டிங் ஸ்டைலை கொண்டவர் ஸ்மித். பேட்டிங் டெக்னிக் விசித்திரமாக இருந்தாலும், சிறப்பாக ஆடி ரன்களை குவித்துவருகிறார் ஸ்மித். டெஸ்ட் போட்டிகளில் அவர் ஆஃப் ஸ்டம்புக்கு வெளியே செல்லும் பந்துகளை எப்படி அடிக்காமல் விடுவாரோ, அதை அப்படியே செய்து காட்டியிருக்கிறார் ரஷீத் கான்.