Asianet News TamilAsianet News Tamil

இந்தியா - பாகிஸ்தான் பெஸ்ட் ஒருநாள் லெவன்.. பாக்., முன்னாள் வீரரின் தேர்வு.. செம டீம்

பாகிஸ்தான் அணியின் முன்னாள் வீரர் ரமீஸ் ராஜா, இந்தியா - பாகிஸ்தான் பெஸ்ட் ஒருநாள் லெவனை தேர்வு செய்துள்ளார். 
 

ramiz raja picks india pakistan odi eleven
Author
Pakistan, First Published May 16, 2020, 11:17 PM IST

பாகிஸ்தான் அணியின் முன்னாள் வீரர் ரமீஸ் ராஜா 1985லிருந்து 1997 வரை சர்வதேச கிரிக்கெட்டில் ஆடினார். 1992ல் இம்ரான் கான் தலைமையில் உலக கோப்பையை வென்ற பாகிஸ்தான் அணியில் ஆடியவர் ரமீஸ் ராஜா. தற்போது வர்ணனையாளராக உள்ளார். 

இந்நிலையில், இந்தியா - பாகிஸ்தான் அணிகளை சேர்ந்த வீரர்களிலிருந்து ஒருநாள் கிரிக்கெட்டின் பெஸ்ட் லெவனை தேர்வு செய்துள்ளார் ரமீஸ் ராஜா. அந்த அணியின் தொடக்க வீரர்களாக அதிரடி மன்னன் வீரேந்திர சேவாக்கையும் ஆல்டைம் பெஸ்ட் பேட்ஸ்மேன்களில் ஒருவரான சுனில் கவாஸ்கரையும் தேர்வு செய்துள்ளார்.

மூன்றாம் வரிசையில் விராட் கோலியையும் நான்காம் வரிசைக்கு மாஸ்டர் பிளாஸ்டர் சச்சின் டெண்டுல்கரையும் ஐந்தாம் வரிசை வீரராக ராகுல் டிராவிட்டையும் தேர்வு செய்துள்ளார். விக்கெட் கீப்பராக தோனியை தேர்வு செய்துள்ளார் ரமீஸ் ராஜா.

ஆல்ரவுண்டராக தனது கேப்டன் இம்ரான் கானை தேர்வு செய்த ரமீஸ் ராஜா, இந்த அணிக்கு அவரையே கேப்டனாகவும் தேர்வு செய்தார். ஃபாஸ்ட் பவுலர்களாக ஆல்டைம் பெஸ்ட் காம்பினேஷனில் ஒன்றான வாசிம் அக்ரம் - வக்கார் யூனிஸ் ஜோடியை தேர்ந்தெடுத்துள்ளார். ஸ்பின்னர்கள் அனில் கும்ப்ளே மற்றும் சக்லைன் முஷ்டாக்.

ரமீஸ் ராஜா தேர்வு செய்த இந்த அணியில் இம்ரான் கானை தவிர வேறு பேட்ஸ்மேனே இல்லை என்பது குறிப்பிடத்தக்கது. 

ரமீஸ் ராஜா தேர்வு செய்த இந்தியா - பாகிஸ்தான் ஒருநாள் லெவன்:

சேவாக், சுனில் கவாஸ்கர், விராட் கோலி, சச்சின் டெண்டுல்கர், ராகுல் டிராவிட், தோனி(விக்கெட் கீப்பர்), இம்ரான் கான்(கேப்டன்), வாசிம் அக்ரம், வக்கார் யூனிஸ், அனில் கும்ப்ளே, சக்லைன் முஷ்டாக்.
 

Follow Us:
Download App:
  • android
  • ios