Asianet News TamilAsianet News Tamil

ஆர்சிபியில் மாற்றம்: பிங்க் நிற ஜெர்சியில் விளையாடும் ராஜஸ்தான் ராயல்ஸ் – டாஸ் வென்று பவுலிங்!

ராயல் சேலஞ்சர்ஸ் பெங்களூரு அணிக்கு எதிரான போட்டியில் டாஸ் வென்ற ராஜஸ்தான் ராயல்ஸ் கேப்டன் சஞ்சு சாம்சன் பவுலிங் தேர்வு செய்துள்ளார்.

Rajasthan Royals Won the toss and Choose to bowl first against Royal Challengers Bengaluru at Jaipur rsk
Author
First Published Apr 6, 2024, 7:26 PM IST

சஞ்சு சாம்சன் தலைமையிலான ராஜஸ்தான் ராயல்ஸ் அணியானது நடப்பு ஆண்டுக்கான ஐபிஎல் 2024 தொடரின் 17ஆவது சீசனில் விளையாடிய 3 போட்டிகளிலும் வெற்றி பெற்று புள்ளிப்பட்டியலில் 2ஆவது இடத்தில் உள்ளது. இதில், 2 போட்டி ஹோம் மைதானத்தில் நடந்தது. ஒரு போட்டியில் மும்பை வான்கடே மைதானத்தில் நடந்தது. இந்தப் போட்டியில் முதலில் பேட்டிங் செய்த மும்பை இந்தியன்ஸ் 125 ரன்கள் மட்டுமே எடுத்தது.

பின்னர் பேட்டிங் செய்த ராஜஸ்தான் ராயல்ஸ் 15.3 ஓவர்களில் 4 விக்கெட்டுகளை இழந்து 127 ரன்கள் எடுத்து 6 விக்கெட்டுகள் வித்தியாசத்தில் வெற்றி பெற்றது. இதே போன்று, பாப் டூப் ளெசிஸ் தலைமையிலான ராயல் சேலஞ்சர்ஸ் பெங்களூரு விளையாடிய 4 போட்டிகளில் 3 போட்டிகளில் தோல்வியும், ஒரு போட்டியில் வெற்றியும் பெற்று புள்ளிப்பட்டியலில் 8ஆவது இடத்தில் உள்ளது.

இதில், ஹோம் மைதானத்தில் நடந்த 3 போட்டிகளில் ஒரு போட்டியில் மட்டுமே வெற்றி பெற்றுள்ளது. இந்த நிலையில் தான் ராஜஸ்தான் ராயல்ஸ் மற்றும் ராயல் சேல்சஞ்சர்ஸ் பெங்களூரு அணிகளுக்கு இடையிலான 19ஆவது லீக் போட்டி இன்று இரவு 7.30 மணிக்கு ஜெய்பூரில் உள்ள சவாய் மான்சிங் ஸ்டேடியத்தில் நடைபெறுகிறது. இதில் டாஸ் வென்ற ராஜஸ்தான் ராயல்ஸ் கேப்டன் சஞ்சு சாம்சன் பவுலிங் தேர்வு செய்துள்ளார்.

ராஜஸ்தான் அணியில் எந்த மாற்றமும் செய்யப்படவில்லை. ஆனால், பெங்களூரு அணியில் ஒரு மாற்றம் செய்யப்பட்டுள்ளது. அதன்படி, அனுஜ் ராவத் நீக்கப்பட்டு சௌரவ் சௌகான் அணியில் இடம் பெற்றுள்ளார். மேலும், தினேஷ் கார்த்திக் விக்கெட் கீப்பிங் பணியை ஏற்றுக் கொண்டுள்ளார். இன்று நடைபெறும் போட்டியில் ராஜஸ்தான் பிங்க் நிற ஜெர்சியில் விளையாட இருக்கிறது. ராஜஸ்தான் மாநில மக்களை கௌரவிக்கும் வகையிலும், அவர்களை பெருமைப்படுத்தும் வகையிலும் இருக்கும் வகையிலும் இந்த பிங்க் நிற ஜெர்சியில் ராஜஸ்தான் அணி வீரர்கள் விளையாடுகின்றனர்.

ராஜஸ்தான் ராயல்ஸ்:

ஜோஸ் பட்லர், யஷஸ்வி ஜெய்ஸ்வால், சஞ்சு சாம்சன் (கேப்டன், விக்கெட் கீப்பர்), ரியான் பராக், துருவ் ஜூரெல், ஷிம்ரான் ஹெட்மயர், ரவிச்சந்திரன் அஸ்வின், யுஸ்வேந்திர சஹால், நந்த்ரே பர்கர், ஆவேஷ் கான், டிரெண்ட் போல்ட்.

ராயல் சேலஞ்சர்ஸ் பெங்களூரு:

விராட் கோலி, பாப் டூ ப்ளெசிஸ் (கேப்டன்), ரஜத் படிதார், கிளென் மேக்ஸ்வெல், கேமரூன் க்ரீன், சௌரவ் சௌகான், தினேஷ் கார்த்திக் (விக்கெட் கீப்பர்), மாயங்க் டாகர், ரீஸ் டாப்ளே, முகமது சிராஜ், யாஷ் தயாள்

சவாய் மான்சிங் ஸ்டேடியம்:

இந்த மைதானத்தில் இதுவரையில் 54 போட்டிகள் நடந்துள்ளது. இதில், முதலில் பேட்டிங் செய்த அணி 20 போட்டியிலும், 2ஆவது பேட்டிங் செய்த அணி 34 போட்டியிலும் வெற்றி பெற்றுள்ளன. மேலும், இந்த மைதானத்தில் எடுக்கப்பட்ட அதிகபட்ச ஸ்கோர் 217/6, 20 ஓவர்கள் (ஆர் ஆர் மற்றும் சன்ரைசர்ஸ் ஹைதராபாத்). அதிகமாக சேஸ் செய்யப்பட்ட ரன்கள் 193/4, 19.2 ஓவர்கள் (டெல்லி மற்றும் ராஜஸ்தான் ராயல்ஸ்). குறைந்தபட்ச ஸ்கோர் 59/10, 17.1 ஓவர்கள் (ராஜஸ்தான் ராயல்ஸ் மற்றும் ராயல் சேலஞ்சர்ஸ் பெங்களூரு).

பேட்டிங்கிற்கு சாதகமாக இந்த மைதானத்தில் அதிக ரன்கள் குவிக்க வாய்ப்பிருக்கிறது. இதற்கு முன்னதாக இந்த சீசனில் ராஜஸ்தான் ராயல்ஸ் 2 போட்டிகளில் விளையாடியுள்ளது. இதில் 2 போட்டியிலும் முதலில் பேட்டிங் செய்து 193/4 ரன்கள் மற்றும் 185/5 ரன்கள் எடுத்து வெற்றி பெற்றிருக்கிறது.

ராஜஸ்தான் ராயல்ஸ் – ராயல் சேலஞ்சர்ஸ் பெங்களூரு:

இதுவரையில் இரு அணிகளும் நேருக்கு நேர் 30 போட்டிகளில் மோதியுள்ளன. இதில், 15 போட்டிகளில் ராஜஸ்தான் ராயல்ஸ் அணியும், 12 போட்டிகளில் ராயல் சேலஞ்சர்ஸ் பெங்களூரு அணியும் வெற்றி பெற்றுள்ளன. மேலும், 3 போட்டிகளுக்கு முடிவு எட்டப்படவில்லை.

Follow Us:
Download App:
  • android
  • ios