கேகேஆர் அணிக்கு எதிரான போட்டியில் டாஸ் வென்ற ராஜஸ்தான் ராயல்ஸ் கேப்டன் சஞ்சு சாம்சன் ஃபீல்டிங்கை தேர்வு செய்தார். 

ஐபிஎல் 14வது சீசனின் இன்றைய போட்டியில் ராஜஸ்தான் ராயல்ஸ் மற்றும் கேகேஆர் அணிகள் மோதுகின்றன. மும்பை வான்கடேவில் நடக்கும் இந்த போட்டியில், இரு அணிகளுமே 2வது வெற்றியை எதிர்நோக்கி களமிறங்கியுள்ள நிலையில், டாஸ் வென்ற ராஜஸ்தான் அணி கேப்டன் சாம்சன், ஃபீல்டிங்கை தேர்வு செய்தார்.

மும்பை வான்கடே ஆடுகளத்தில் சேஸிங் செய்த அணிகள் தான் பெரும்பாலும் வென்றிருக்கின்றன. 2வது இன்னிங்ஸில் பனி காரணமாக பந்துவீசுவது கடினமாக இருக்கும். முதலில் பந்துவீசுவதுதான் பவுலர்களுக்கு சாதகமாக இருக்கும். எனவே முதலில் பந்துவீச முடிவு செய்தார் ராஜஸ்தான் கேப்டன் சாம்சன்.

ராஜஸ்தான் அணியில் 2 மாற்றங்கள் செய்யப்பட்டுள்ளன. தொடக்க வீரர் மனன் வோராவுக்கு பதிலாக இடது கை இளம் அதிரடி தொடக்க வீரர் யஷஸ்வி ஜெய்ஸ்வாலும், ஷ்ரேயாஸ் கோபாலுக்கு பதிலாக ஜெய்தேவ் உனாத்கத்தும் சேர்க்கப்பட்டுள்ளனர்.

ராஜஸ்தான் ராயல்ஸ் அணி:

ஜோஸ் பட்லர், யஷஸ்வி ஜெய்ஸ்வால், சஞ்சு சாம்சன்(கேப்டன், விக்கெட் கீப்பர்), ஷிவம் துபே, டேவிட் மில்லர், ரியான் பராக், ராகுல் டெவாட்டியா, கிறிஸ் மோரிஸ், ஜெய்தேவ் உனாத்கத், சேத்தன் சக்காரியா, முஸ்தாஃபிசுர் ரஹ்மான்.

கேகேஆர் அணியில் ஃபாஸ்ட் பவுலர் கமலேஷ் நாகர்கோட்டிக்கு பதிலாக ஷிவம் மாவி சேர்க்கப்பட்டுள்ளார்.

கேகேஆர் அணி:

நிதிஷ் ராணா, ஷுப்மன் கில், ராகுல் திரிபாதி, ஒயின் மோர்கன்(கேப்டன்), தினேஷ் கார்த்திக்(விக்கெட் கீப்பர்), சுனில் நரைன், ஆண்ட்ரே ரசல், பாட் கம்மின்ஸ், ஷிவம் மாவி, வருண் சக்கரவர்த்தி, பிரசித் கிருஷ்ணா.