Asianet News TamilAsianet News Tamil

LSG vs RR: டாஸ் ரிப்போர்ட்.. லக்னோ அணியில் அந்த பையன் கம்பேக்..! ராஜஸ்தான் ராயல்ஸ் அணியில் 2 மாற்றங்கள்

லக்னோ சூப்பர் ஜெயிண்ட்ஸ் அணிக்கு எதிரான போட்டியில் டாஸ் வென்ற ராஜஸ்தான் ராயல்ஸ் அணி கேப்டன் சஞ்சு சாம்சன் பேட்டிங்கை தேர்வு செய்தார்.
 

rajasthan royals win toss opt to bat against lucknow super giants in ipl 2022
Author
Mumbai, First Published May 15, 2022, 7:28 PM IST

ஐபிஎல் 15வது சீசனின் இன்றைய போட்டியில் லக்னோ சூப்பர் ஜெயிண்ட்ஸ் மற்றும் ராஜஸ்தான் ராயல்ஸ் அணிகள் மோதுகின்றன. 16 புள்ளிகளுடன் இருக்கும் லக்னோ மற்றும் 14 புள்ளிகளுடன் இருக்கும் ராஜஸ்தான் ஆகிய 2 அணிகளுக்குமே இந்த போட்டி முக்கியமானது என்பதால் இரு அணிகளுமே வெற்றி வேட்கையுடன் களமிறங்கியுள்ளன.

மும்பை ப்ரபோர்ன் மைதானத்தில் நடக்கும் இந்த போட்டியில் டாஸ் வென்ற ராஜஸ்தான் ராயல்ஸ் அணி கேப்டன் சஞ்சு சாம்சன் பேட்டிங்கை தேர்வு செய்தார். ராஜஸ்தான் ராயல்ஸ் அணியில் 2 மாற்றங்கள் செய்யப்பட்டுள்ளன. ராஜஸ்தான் அணியில் வாண்டர் டசனுக்கு பதிலாக ஆல்ரவுண்டர் ஜிம்மி நீஷமும், குல்தீப் சென்னுக்கு பதிலாக ஒபெட் மெக்காயும் சேர்க்கப்பட்டுள்ளனர்.

ராஜஸ்தான் ராயல்ஸ் அணி:

யஷஸ்வி ஜெய்ஸ்வால், ஜோஸ் பட்லர், சஞ்சு சாம்சன் (கேப்டன், விக்கெட் கீப்பர்), தேவ்தத் படிக்கல், ஜிம்மி நீஷம், ரியான் பராக், ரவி அஷ்வின், டிரெண்ட் போல்ட், பிரசித் கிருஷ்ணா, யுஸ்வேந்திர சாஹல், ஒபெட் மெக்காய்.

லக்னோ அணியில் ஒரு மாற்றம் செய்யப்பட்டுள்ளது. ரவி பிஷ்னோய் மீண்டும் களமிறங்குவதால் கரன் ஷர்மா நீக்கப்பட்டுள்ளார்.

லக்னோ சூப்பர் ஜெயிண்ட்ஸ் அணி:

டி காக் (விக்கெட் கீப்பர்), கேஎல் ராகுல் (கேப்டன்), தீபக் ஹூடா, மார்கஸ் ஸ்டோய்னிஸ், க்ருணல் பாண்டியா, ஆயுஷ் பதோனி, ஜேசன் ஹோல்டர், துஷ்மந்தா சமீரா, ரவி பிஷ்னோய், ஆவேஷ் கான், மோசின் கான்.
 

Follow Us:
Download App:
  • android
  • ios