Asianet News TamilAsianet News Tamil

LSG vs RR: முக்கியமான போட்டியில் லக்னோ அணிக்கு சவாலான இலக்கை நிர்ணயித்த ராஜஸ்தான் ராயல்ஸ்

லக்னோ சூப்பர் ஜெயிண்ட்ஸுக்கு எதிரான முக்கியமான போட்டியில் முதலில் பேட்டிங் ஆடிய ராஜஸ்தான் ராயல்ஸ் அணி 20 ஓவரில் 178 ரன்கள் அடித்து, 179 ரன்கள் என்ற இலக்கை லக்னோ அணிக்கு நிர்ணயித்துள்ளது.
 

rajasthan royals set challenging target to lucknow super giants in ipl 2022
Author
Mumbai, First Published May 15, 2022, 9:37 PM IST

ஐபிஎல் 15வது சீசனின் இன்றைய போட்டியில் லக்னோ சூப்பர் ஜெயிண்ட்ஸ் மற்றும் ராஜஸ்தான் ராயல்ஸ் அணிகள் ஆடிவருகின்றன. 16 புள்ளிகளுடன் இருக்கும் லக்னோ மற்றும் 14 புள்ளிகளுடன் இருக்கும் ராஜஸ்தான் ஆகிய 2 அணிகளுக்குமே இந்த போட்டி முக்கியமானது என்பதால் இரு அணிகளுமே வெற்றி வேட்கையுடன் களமிறங்கின.

மும்பை ப்ரபோர்ன் மைதானத்தில் நடந்துவரும் இந்த போட்டியில் டாஸ் வென்ற ராஜஸ்தான் ராயல்ஸ் அணி கேப்டன் சஞ்சு சாம்சன் பேட்டிங்கை தேர்வு செய்தார். ராஜஸ்தான் ராயல்ஸ் அணியில் 2 மாற்றங்கள் செய்யப்பட்டுள்ளன. ராஜஸ்தான் அணியில் வாண்டர் டசனுக்கு பதிலாக ஆல்ரவுண்டர் ஜிம்மி நீஷமும், குல்தீப் சென்னுக்கு பதிலாக ஒபெட் மெக்காயும் சேர்க்கப்பட்டனர்.

ராஜஸ்தான் ராயல்ஸ் அணி:

யஷஸ்வி ஜெய்ஸ்வால், ஜோஸ் பட்லர், சஞ்சு சாம்சன் (கேப்டன், விக்கெட் கீப்பர்), தேவ்தத் படிக்கல், ஜிம்மி நீஷம், ரியான் பராக், ரவி அஷ்வின், டிரெண்ட் போல்ட், பிரசித் கிருஷ்ணா, யுஸ்வேந்திர சாஹல், ஒபெட் மெக்காய்.

லக்னோ அணியில் ஒரு மாற்றம் செய்யப்பட்டுள்ளது. ரவி பிஷ்னோய் மீண்டும் களமிறங்குவதால் கரன் ஷர்மா நீக்கப்பட்டார்.

லக்னோ சூப்பர் ஜெயிண்ட்ஸ் அணி:

டி காக் (விக்கெட் கீப்பர்), கேஎல் ராகுல் (கேப்டன்), தீபக் ஹூடா, மார்கஸ் ஸ்டோய்னிஸ், க்ருணல் பாண்டியா, ஆயுஷ் பதோனி, ஜேசன் ஹோல்டர், துஷ்மந்தா சமீரா, ரவி பிஷ்னோய், ஆவேஷ் கான், மோசின் கான்.

முதலில் பேட்டிங் ஆடிய ராஜஸ்தான் ராயல்ஸ் அணியின் அதிரடி தொடக்க வீரர் ஜோஸ் பட்லரை 2 ரன்னில் வீழ்த்தினார் ஆவேஷ் கான். ஆனால் இளம் தொடக்க வீரரான யஷஸ்வி ஜெய்ஸ்வால் அடித்து ஆடி29 பந்தில் 41 ரன்களை அடித்து அரைசதத்தை தவறவிட்டு ஆட்டமிழந்தார். சஞ்சு சாம்சன் 32 ரன்கள் அடித்து ஆட்டமிழந்தார். 4ம் வரிசையில் இறங்கிய தேவ்தத் படிக்கல் பவுண்டரியும் சிக்ஸருமாக அடித்து 18 பந்தில் 39 ரன்கள் அடித்து ஆட்டமிழந்தார்.

ஜெய்ஸ்வால், சாம்சன், படிக்கல் ஆகிய மூவருமே நல்ல தொடக்கம் கிடைத்தும் பெரிய ஸ்கோர் அடிக்கவில்லை. ஆனால் அதிரடியாக நல்ல ஸ்டிரைக் ரேட்டில் ஆடியதால் அணியின் ஸ்கோர் உயர்ந்தது. அடித்து ஆடியாக வேண்டிய முக்கியமான கட்டத்தில் இன்னிங்ஸின் 18வது ஓவரில் ரியான் பராக்(19) மற்றும் ஜிம்மி நீஷம் (14) ஆகிய இருவரும் ஆட்டமிழக்க, டெத் ஓவரில் டிரெண்ட் போல்ட் ஒருசில பவுண்டரிகளை விளாசியதால் 20 ஓவரில் 178 ரன்கள் அடித்த ராஜஸ்தான் அணி, 179 ரன்கள் என்ற சவாலான இலக்கை லக்னோ அணிக்கு நிர்ணயித்துள்ளது.

இந்த போட்டியில் ஜெயித்தால் லக்னோ அணி பிளே ஆஃபிற்கு முன்னேறிவிடும். 
 

Follow Us:
Download App:
  • android
  • ios