கேகேஆருக்கு எதிரான போட்டியில் முதலில் பேட்டிங் ஆடிய ராஜஸ்தான் ராயல்ஸ் அணி 20 ஓவரில் 160 ரன்கள் அடித்து, 161 ரன்கள் என்ற இலக்கை நிர்ணயித்துள்ளது.
ஐபிஎல் 15வது சீசனின் இன்றைய போட்டியில் கேகேஆரும் ராஜஸ்தான் ராயல்ஸும் ஆடிவருகின்றன. மும்பை வான்கடேவில் நடந்துவரும் இந்த போட்டியில் டாஸ் வென்ற கேகேஆர் கேப்டன் ஷ்ரேயாஸ் ஐயர் ஃபீல்டிங்கை தேர்வு செய்தார்.
கேகேஆர் அணி:
ஆரோன் ஃபின்ச், பாபா இந்திரஜித் (விக்கெட் கீப்பர்), ஷ்ரேயாஸ் ஐயர் (கேப்டன்), நிதிஷ் ராணா, ரிங்கு சிங், அனுகுல் ராய், ஆண்ட்ரே ரசல், சுனில் நரைன், உமேஷ் யாதவ், டிம் சௌதி, ஷிவம் மாவி.
ராஜஸ்தான் ராயல்ஸ் அணி:
ஜோஸ் பட்லர், தேவ்தத் படிக்கல், சஞ்சு சாம்சன் (கேப்டன், விக்கெட் கீப்பர்), கருண் நாயர், ஷிம்ரான் ஹெட்மயர், ரியான் பராக், ரவிச்சந்திரன் அஷ்வின், டிரெண்ட் போல்ட், பிரசித் கிருஷ்ணா, யுஸ்வேந்திர சாஹல், குல்தீப் சென்.
முதலில் பேட்டிங் ஆடிய ராஜஸ்தான் ராயல்ஸ் அணியின் தொடக்க வீரர் தேவ்தத் படிக்கல் 2 ரன்னில் ஆட்டமிழக்க, தட்டுத்தடுமாறி பேட்டிங் ஆடிய பட்லர் 25 பந்தில்22 ரன்கள் மட்டுமே அடித்து ஆட்டமிழந்தார். பொறுப்புடனும் அதேவேளையில் அடித்தும் ஆடிய கேப்டன் சஞ்சு சாம்சன் அரைசதம் அடித்தார். கருண் நாயர் 13 ரன்னிலும், ரியான் பராக், 19 ரன்னிலும் ஆட்டமிழக்க, அரைசதம் அடித்த சாம்சன் 54 ரன்னில ஆட்டமிழந்தார்.
டெத் ஓவர்களில் ஷிம்ரான் ஹெட்மயர் அடித்து ஆடி ஸ்கோரை உயர்த்தினார். 13 பந்தில் ஒரு பவுண்டரி மற்றும் 2 சிக்ஸர்களுடன் 27ரன்கள் அடித்து 20 ஓவரில் ராஜஸ்தான் ராயல்ஸ் அணி 152 ரன்கள் அடிக்க உதவினார் ஹெட்மயர். 153 ரன்கள் என்ற சவாலான இலக்கை கேகேஆருக்கு நிர்ணயித்துள்ளது ராஜஸ்தான் ராயல்ஸ் அணி.
