டெல்லி கேபிடள்ஸுக்கு எதிரான இன்றைய போட்டியில் களமிறங்கும் உத்தேச ராஜஸ்தான் ராயல்ஸ் அணியை பார்ப்போம்.
ஐபிஎல் 14வது சீசனின் இன்றைய போட்டியில் ராஜஸ்தான் ராயல்ஸ் மற்றும் டெல்லி கேபிடள்ஸ் அணிகள் மோதுகின்றன. மும்பையில் இரவு 7.30 மணிக்கு இந்த போட்டி தொடங்குகிறது.
பஞ்சாப் கிங்ஸுக்கு எதிரான முதல் போட்டியில் 222 ரன்கள் என்ற கடின இலக்கை விரட்டிய ராஜஸ்தான் ராயல்ஸ் அணி, கடைசிவரை போராடி வெறும் 4 ரன் வித்தியாசத்தில் தோல்வியை தழுவியது. எனவே டெல்லி கேபிடள்ஸூக்கு எதிரான இன்றைய போட்டியில் வெற்றி பெறும் முனைப்பில் களமிறங்குகிறது.

ராஜஸ்தான் அணியின் நட்சத்திர வீரர் ஜோஃப்ரா ஆர்ச்சர் காயம் காரணமாக ஐபிஎல்லில் முதல் சில போட்டிகளில் ஆடமாட்டார் என்று தெரிவிக்கப்பட்டது. அந்தவகையில், இதுவரையில் அவர் எப்போது ஆடுவார் என்று தெரிவிக்கப்படாத நிலையில், மற்றொரு நட்சத்திர வீரரான பென் ஸ்டோக்ஸும் காயத்தால் சீசனிலிருந்து விலகியிருப்பது ராஜஸ்தான் அணிக்கு பெரும் தலைவலியை ஏற்படுத்தியுள்ளது.
பஞ்சாப் கிங்ஸுக்கு எதிரான போட்டியில் கைவிரலில் காயம் ஏற்பட்டதால் இந்த சீசனிலிருந்தே விலகியுள்ளார் பென் ஸ்டோக்ஸ். இது ராஜஸ்தான் அணிக்கு மரண அடி தான் என்றாலும், அதைப்பற்றி யோசிக்காமல், அவருக்கு மாற்று வீரரை இறக்கி, அவர் மீது நம்பிக்கை வைத்து செயல்படவைக்க வேண்டியது அவசியம்.

அந்தவகையில், ஸ்டோக்ஸுக்கு பதிலாக இன்றைய போட்டியில் இங்கிலாந்து அதிரடி வீரரான லியாம் லிவிங்ஸ்டன் ஆடுவார் என்று எதிர்பார்க்கப்படுகிறது. லிவிங்ஸ்டன் மற்றும் டேவிட் மில்லர் ஆகிய இருவரும் தான் ராஜஸ்தானுக்கு இருக்கும் தேர்வுகள். மில்லர் ஏற்கனவே பலமுறை வாய்ப்பு பெற்று ஆடியும், ஜொலிக்க தவறிவிட்டார். எனவே லிவிங்ஸ்டன் இந்த சீசனில் வாய்ப்பு பெறுவார்.
பென் ஸ்டோக்ஸுக்கு பதிலாக லிவிங்ஸ்டன் என்ற மாற்றத்தை தவிர ராஜஸ்தான் அணியில் வேறு மாற்றம் செய்யப்பட வாய்ப்பில்லை. மற்றபடி கடந்த போட்டியில் ஆடிய அதே காம்பினேஷன் தொடரும்.
உத்தேச ராஜஸ்தான் ராயல்ஸ் அணி:
ஜோஸ் பட்லர், மனன் வோரா, சஞ்சு சாம்சன், லிவிங்ஸ்டன், ரியான் பராக், ராகுல் டெவாட்டியா, ஷிவம் துபே, கிறிஸ் மோரிஸ், ஷ்ரேயாஸ் கோபால், முஸ்தாஃபிசுர் ரஹ்மான், சேத்தன் சகாரியா.
