ஐபிஎல்லில் 12 சீசன்கள் வெற்றிகரமாக முடிந்த நிலையில், 13வது சீசன் வரும் 29ம் தேதி தொடங்குகிறது. வழக்கம்போலவே மும்பை இந்தியன்ஸ், கேகேஆர் மற்றும் சிஎஸ்கே அணிகள் வலுவாக திகழும் நிலையில், ராஜஸ்தான் ராயல்ஸ் அணி, இந்த சீசனை பேராவலுடனும் பெரும் எதிர்பார்ப்புடனும் எதிர்நோக்கியிருக்கிறது. 

ராஜஸ்தான் அணியில் சஞ்சு சாம்சன், பட்லர், ஸ்மித், பென் ஸ்டோக்ஸ் என கோர் டீம் வலுவாக உள்ளது. அந்த அணியின் நட்சத்திர வீரராக கடந்த இரண்டு சீசன்களாக ஜொலித்த ஜோஃப்ரா ஆர்ச்சர் காயம் காரணமாக இந்த சீசனில் ஆடவில்லை. கடந்த 2 சீசன்களிலும் பெரும் தாக்கத்தை ஏற்படுத்திய அவர், இந்த சீசனில் ஆடாதது அந்த அணிக்கு இழப்புதான். எனினும் அந்த அணியில் போதுமான ஃபாஸ்ட் பவுலர்கள் உள்ளனர்.

தொடக்க வீரர்களாக சஞ்சு சாம்சனும் பட்லரும் இறங்குவார்கள். மூன்றாம் வரிசையில் கேப்டன் ஸ்மித் இறங்குவார். நான்காம் வரிசையில் யஷஸ்வி ஜெய்ஸ்வால், ராபின் உத்தப்பா, ரியான் பரக் ஆகியோரில் ஒருவர் மாற்றி இறக்கப்படலாம். யஷஸ்வி தொடக்க வீரராக இறக்கப்படால், சாம்சன் கூட நான்காம் வரிசையில் இறக்கப்படலாம்.

மிடில் ஆர்டரில் வெளிநாட்டு வீரர்களான டேவிட் மில்லர் - டாம் கரன் ஆகிய இருவரில் ஒருவர் இறங்க வாய்ப்புள்ளது. சிறந்த ஆல்ரவுண்டரும் அந்த அணியின் நட்சத்திர வீரருமான பென் ஸ்டோக்ஸ் கண்டிப்பாக அணியில் இருப்பார். ஸ்பின்னராக ஷ்ரேயாஸ் கோபால் ஆடுவது உறுதி. ஆடுகளத்தின் தன்மை எதிரணி ஆகியவற்றின் அடிப்படையில், இரண்டு ஸ்பின்னர்கள் ஆடுவதாக இருந்தால், கோபாலுடன் மயன்க் மார்கண்டே அல்லது ராகுல் டெவாட்டியா இறங்க வாய்ப்புள்ளது. 

ஃபாஸ்ட் பவுலர்களாக ஜெய்தேவ் உனாத்கத் மற்றும் வருண் ஆரோனுடன்  வெளிநாட்டு பவுலர்களான ஒஷேன் தாமஸ் மற்றும் ஆண்ட்ரூ டை ஆகிய இருவரில் ஒருவர் ஆடுவார். 

ராஜஸ்தான் ராயல்ஸ் அணி:
 
சஞ்சு சாம்சன், பட்லர்(விக்கெட் கீப்பர்), ஸ்டீவ் ஸ்மித்(கேப்டன்), யஷஸ்வி ஜெய்ஸ்வால்/ராபின் உத்தப்பா/ரியான் பரக், டேவிட் மில்லர்/டாம் கரன், பென் ஸ்டோக்ஸ், ஷ்ரேயாஸ் கோபால், வருண் ஆரோன்/கார்த்திக் தியாகி, ஜெய்தேவ் உனாத்கத், ஒஷேன் தாமஸ்/ஆண்ட்ரூ டை.

வெளிநாட்டு வீரர்கள் நான்கு பேர் தான் ஆடும் லெவனில் இடம்பெற முடியும். பட்லர் மற்றும் பென் ஸ்டோக்ஸ் ஆகிய இருவரும் ஆடும் லெவனில் இடம்பெறுவது உறுதி. டாம் கரன் - மில்லரில் ஆகிய இருவரில் யாராவது ஒருவரும், ஆண்ட்ரூ டை - ஒஷேன் தாமஸ் ஆகிய இருவரில் ஒருவரும் ஆடும் லெவனில் இடம்பெறுவார். 

அண்டர் 19 உலக கோப்பையில் அபாரமாக வீசி கவனத்தை ஈர்த்த கார்த்திக் தியாகியும் ஒருசில போட்டிகளில் ஆடும் லெவனில் இடம்பெறுவார். வருன் ஆரோன் அல்லது கார்த்திக் தியாகி ஆடுவார். 

Also Read - எப்பவுமே இதையே பண்ணா கடுப்பு ஆகாம என்ன செய்யும்? தாஹிரை கோமாளினு திட்டிய முன்ரோ.. களத்தில் கடும் மோதல்

மொத்த ராஜஸ்தான் ராயல்ஸ் அணி:

மஹிபால் லோம்ரார், மனன் வோரா, ரியான் பரக், ஸ்டீவ் ஸ்மித், ராபின் உத்தப்பா, டேவிட் மில்லர், அங்கித் ராஜ்பூட், மயன்க் மார்கண்டே, ஜோஃப்ரா ஆர்ச்சர், ஷ்ரேயாஸ் கோபால், வருண் ஆரோன், ஜெய்தேவ் உனாத்கத், கார்த்திக் தியாகி, ஆகாஷ் சிங், ஒஷேன் தாமஸ், ஆண்ட்ரூ டை, பென் ஸ்டோக்ஸ், ராகுல் டெவாட்டியா, ஷேஷாங்க் சிங், யஷஸ்வி ஜெய்ஸ்வால், அனிருதா ஜோஷி, டாம் கரன், ஜோஸ் பட்லர், சஞ்சு சாம்சன், அனுஜ் ராவட்.