ராஜஸ்தான் ராயல்ஸ் மற்றும் லக்னோ சூப்பர் ஜெயிண்ட்ஸ் அணிகளுக்கு இடையேயான இன்றைய போட்டியில் களமிறங்கும் இரு அணிகளின் உத்தேச ஆடும் லெவனை பார்ப்போம். 

ஐபிஎல் 15வது சீசனின் இன்றைய போட்டியில் ராஜஸ்தான் ராயல்ஸ் மற்றும் லக்னோ சூப்பர் ஜெயிண்ட்ஸ் அணிகள் மோதுகின்றன. இரு அணிகளுமே இந்த சீசனில் நன்றாக விளையாடிவரும் நிலையில், மும்பை வான்கடேவில் இன்றிரவு 7.30 மணிக்கு தொடங்கி நடக்கும் போட்டியில் இந்த இரு அணிகளும் மோதுகின்றன.


இந்த போட்டிக்கான ராஜஸ்தான் ராயல்ஸ் அணியில் ஒரு மாற்றம் செய்யப்படலாம். இளம் தொடக்க வீரர் யஷஸ்வி ஜெய்ஸ்வால் 3 போட்டிகளிலும் சொதப்பியதால் அவர் நீக்கப்படுவார் என்று எதிர்பார்க்கப்படுகிறது. ஜோஸ் பட்லருடன் தேவ்தத் படிக்கல் தொடக்க வீரராக இறங்குவார். ஜெய்ஸ்வாலுக்கு பதிலாக நியூசிலாந்து ஆல்ரவுண்டர் ஜிம்மி நீஷம் சேர்க்கப்படுவார். பட்லர், ஹெட்மயர், டிரெண்ட் போல்ட் ஆகிய 3 வெளிநாட்டு வீரர்களுடன் மட்டுமே ராஜஸ்தான் அணி ஆடியதால் இன்னொரு வெளிநாட்டு வீரருக்கான இடம் இருக்கிறது. எனவே ஜெய்ஸ்வாலுக்கு பதிலாக ஜிம்மி நீஷம் ஆடுவார் என்று எதிர்பார்க்கப்படுகிறது.

உத்தேச ராஜஸ்தான் ராயல்ஸ் அணி:

ஜோஸ் பட்லர், தேவ்தத் படிக்கல், சஞ்சு சாம்சன் (கேப்டன், விக்கெட் கீப்பர்), ஷிம்ரான் ஹெட்மயர், ரியான் பராக், ரவிச்சந்திரன் அஷ்வின், ஜிம்மி நீஷம், நவ்தீப் சைனி, டிரெண்ட் போல்ட், பிரசித் கிருஷ்ணா, யுஸ்வேந்திர சாஹல்.

லக்னோ சூப்பர் ஜெயிண்ட்ஸ் அணியில் எந்த மாற்றமும் செய்யப்பட வாய்ப்பில்லை. லக்னோ அணியில் மாற்றம் செய்வதற்கான அவசியமும் இல்லை. அந்த அணி வீரர்கள் அவர்களது பணியை செவ்வனே செய்துவருகின்றனர். அதனால் கடந்த போட்டியில் ஆடிய அதே ஆடும் லெவன் காம்பினேஷனுடன் தான் லக்னோ அணி களமிறங்கும்.

உத்தேச லக்னோ சூப்பர் ஜெயிண்ட்ஸ் அணி:

கேஎல் ராகுல் (கேப்டன்), குயிண்டன் டி காக் (விக்கெட் கீப்பர்), எவின் லீவிஸ், தீபக் ஹூடா, ஆயுஷ் பதோனி, க்ருணல் பாண்டியா, ஜேசன் ஹோல்டர், கிருஷ்ணப்பா கௌதம், ஆண்ட்ரூ டை, ரவி பிஷ்னோய், ஆவேஷ் கான்.