Asianet News TamilAsianet News Tamil

விராட் கோலிக்கு எதிராக தொடரும் விமர்சனங்கள்… ஆதரவு குரல் கொடுத்த ராகுல்காந்தி!!

இந்திய அணி கேப்டன் விராட் கோலிக்கு எதிராக விமர்சனங்கள் தொடரும் நிலையில் அவருக்கு ஆதரவாக காங்கிரஸ் எம்.பி.ராகுல் காந்தி டிவிட்டரில் கருத்து பகிர்ந்துள்ளார்.

rahulgandhi supports virat kholi
Author
India, First Published Nov 2, 2021, 6:54 PM IST

இந்திய கிரிக்கெட் அணியின் கேப்டன் விராட் கோலிக்கு ஆதரவாக காங்கிரஸ் எம்.பி.ராகுல் காந்தி ஆதரவு தெரிவித்துள்ளார். விராட் கோலி தலைமையிலான இந்திய கிரிக்கெட் அணி டி20 உலகக் கோப்பைப் போட்டியில் முதல் இரண்டு ஆட்டத்தில் படுதோல்வி அடைந்தது சூப்பர்-12 லீக்கில் முக்கியத்துவம் வாய்ந்த ஆட்டத்தில் பாகிஸ்தானிடமும், நியூஸிலாந்திடமும் இந்தியா தோல்வி அடைந்தது. இதனால் ஏமாற்றாடைந்த இந்திய ரசிகர்கள், இந்திய அணி கேப்டன் கோலியை கடுமையாக விமர்சித்து வருகின்றனர். அதுமட்டுமின்றி கோலி மீதும் அணி வீரர்கள் மீதும் பல்வேறு விமர்சனங்களும் சமூகவலைதளங்களில் வந்துக்கொண்டிருகின்றன. டி20 உலகக் கோப்பைக்கு முடிந்த பின் டி20 அணி கேப்டன் பொறுப்பிலிருந்து, தான் விலகுவதாக விராட் கோலி ஏற்கெனவே அறிவித்துவிட்டார். இதையடுத்து இந்திய டி20 அணியின் புதிய கேப்டன் யார் என்பதை இன்னும் ஒருசில வாரங்களில் பிசிசிஐ அறிவிக்கும் என எதிர்பார்க்கப்படுகிறது. தற்போது, இந்திய டி20 அணியின் துணை கேப்டனாக இருக்கும் ரோகித் ஷர்மாவுக்கு கேப்டன் பதவி வழங்க அதிக வாய்ப்பிருப்பதாக கூறப்படுகிறது. எனினும், எதிர்வரவிருக்கும் நியூசிலாந்து அணிக்கு எதிரான டி20 தொடரிலிருந்து ரோகித் உள்ளிட்ட மூத்த வீரர்களுக்கு ஓய்வு அளிக்கப்படும் என்றும், அவருக்கு பதிலாக கே.எல்.ராகுல் இந்திய அணியின் தற்காலிக கேப்டனாக செயல்படுவார் எனவும் தகவல்கள் வெளியாகியுள்ளது.

rahulgandhi supports virat kholi

இந்த நிலையில் ஐக்கிய அமீரகத்தில் நடைபெற்ற டி20 உலகக் கோப்பை தொடரில் இந்திய அணி முதன்முறையா பாகிஸ்தானிடம் 10 விக்கெட்கள் வித்தியாசத்தில் தோல்வி அடைந்தது. இந்த தோல்வியை அடுத்து வேகப்பந்து வீச்சாளர் முகமது ஷமியை அவதூறாக பேசி சமூக வலைதளங்களில் கருத்துகள் பகிரப்பட்டது. இதையடுத்து முகமது ஷமிக்கு ஆதரவாக இந்திய அணியின் முன்னாள் வீரர்கள் மற்றும் கேப்டன் விராட் கோலி ஆகியோர் ஆதரவாக கருத்துகளை வெளியிட்டனர். விராட் கோலி தனது ட்விட்டர் பக்கத்தில், மதத்தின் அடிப்படையில் ஒருவரை விமர்சிப்பது மிகவும் மோசமான செயல் என்று பதவிட்டிருந்தார். இந்நிலையில் ஷமிக்கு ஆதரவாக விராட் கோலி கருத்து பதிவிட்டிருந்த நிலையில் அவரது 9 மாத பெண் குழந்தைக்கு சமூக வலைதளத்தில் பாலியல் மிரட்டல் விடுக்கப்பட்டது. இதற்கு பலர் தங்களது எதிர்ப்பை தெரிவித்து வருகின்றனர். இந்நிலையில் காங்கிரஸ் எம்.பி.ராகுல் காந்தி இந்திய அணி கேப்டன் விராட் கோலிக்கு ஆதரவு தெரிவித்துள்ளார். மேலும் இதுக்குறித்த அவரது டிவிட்டர் பதிவில், அன்பு விராட், இந்த மக்கள் எல்லாம் வெறுப்பால் நிரப்பப்பட்டுள்ளார்கள். இவர்களுக்கு யாரும் அன்பைக் கொடுக்கவில்லை. இவர்களை மன்னித்துவிடுங்கள். இந்திய அணியைப் பாதுகாப்பாக வைத்திருங்கள் என்று அறிவுறுத்தியுள்ளார். 

Follow Us:
Download App:
  • android
  • ios