Asianet News TamilAsianet News Tamil

உலக கோப்பையை அவ்வளவு ஈசியா ஜெயிச்சுட முடியாது!! கோலி&கோ-வை எச்சரித்த டிராவிட்

உலக கோப்பை நெருங்கிய நிலையில், கோலி தலைமையிலான இந்திய அணியை ராகுல் டிராவிட் எச்சரித்துள்ளார். 

rahul dravid warning kohli and co ahead of world cup
Author
India, First Published Mar 22, 2019, 11:30 AM IST

உலக கோப்பை நெருங்கிவிட்ட நிலையில், உலக கோப்பைக்காக அனைத்து அணிகளும் தீவிரமாக தயாராகிவருகின்றன. விராட் கோலி தலைமையிலான இந்திய அணி, இயன் மோர்கன் தலைமையிலான இங்கிலாந்து அணி ஆகிய இரு அணிகளில் ஒன்றுதான் உலக கோப்பையை வெல்லும் என பெரும்பாலான முன்னாள் வீரர்கள் கணித்து கருத்து தெரிவித்துள்ளனர்.

வில்லியம்சன் தலைமையிலான நியூசிலாந்து அணியும் ஆக்ரோஷமாக ஆடிவருகிறது. அந்த அணியில் கப்டில், வில்லியம்சன், டெய்லர், லதாம், கிராண்ட் ஹோம் ஆகியோர் நல்ல ஃபார்மில் உள்ளனர். எனவே அந்த அணியும் உலக கோப்பையில் கடும் நெருக்கடி கொடுக்கும். 

rahul dravid warning kohli and co ahead of world cup

ஸ்மித் மற்றும் வார்னர் இல்லாமல் கடந்த ஓராண்டாக திணறிவந்த ஆஸ்திரேலிய அணி, இந்திய மண்ணில் இந்திய அணியை வீழ்த்தி புது உத்வேகத்துடன் காணப்படுகிறது. ஸ்மித் - வார்னர் இல்லாமலேயே அந்த அணி இந்திய அணியை வீழ்த்திவிட்டது. உஸ்மான் கவாஜா, ஆடம் ஸாம்பா, பாட் கம்மின்ஸ் ஆகியோர் நல்ல ஃபார்மில் அருமையாக ஆடிவருகின்றனர். எனவே ஸ்மித்தும் வார்னரும் அணிக்கு திரும்பிவிட்டால் வலுவான அணியாகிவிடும் ஆஸ்திரேலிய அணி. அதுமட்டுமல்லாமல் உலக கோப்பைக்கு அந்த அணியின் துணை பயிற்சியாளராக 2 உலக கோப்பையை வென்ற முன்னாள் கேப்டன் பாண்டிங் நியமிக்கப்பட்டுள்ளார். எனவே உலக கோப்பையில் ஆஸ்திரேலிய அணி சவாலான அணியாக திகழும். அந்த அணியை குறைத்து மதிப்பிட முடியாது. 

rahul dravid warning kohli and co ahead of world cup

இதற்கிடையே, வெஸ்ட் இண்டீஸ் அணியும் அபாரமாக ஆடிவருகிறது. கெய்ல், ஷாய் ஹோப், ஹெட்மயர், பிராத்வெயிட், ஹோல்டர் என அந்த அணியும் வலுவாக திகழ்கிறது. இவை தவிர தென்னாப்பிரிக்கா, பாகிஸ்தான் அணிகளும் சிறந்த அணிகள்தான். யாரும் கண்டுகொள்ளாத ஆஃப்கானிஸ்தான் அணி சிறந்த கிரிக்கெட்டை ஆடிவருவதால் அந்த அணியை குறைத்து மதிப்பிட முடியாது. கண்டிப்பாக மிகப்பெரிய அணிகளுக்கு எல்லாம் ஆஃப்கானிஸ்தான் அணி கடும் சவாலாக திகழும். ஆசிய கோப்பையில் கூட இந்திய அணிக்கு கடும் சவாலாக திகழ்ந்தது. கடைசியில் இந்திய அணியால் போட்டியை டிரா செய்ய முடிந்ததே தவிர வெல்ல முடியவில்லை. எனவே அந்த அணியும் சவாலான அணிதான்.

rahul dravid warning kohli and co ahead of world cup

இவ்வாறு ஒவ்வொரு அணியுமே வலுவாக திகழும் நிலையில், பல முன்னாள் வீரர்களும் உலக கோப்பையை வெல்ல வாய்ப்புள்ள அணியை கணித்து தங்களது கருத்தை தெரிவித்துவருகின்றனர். அவர்களில் பெரும்பாலானோர் இந்தியா மற்றும் இங்கிலாந்து ஆகிய இரு அணிகளில் ஒன்றுதான் கோப்பையை வெல்லும் என கருத்து தெரிவித்துள்ளனர். 

கோலி தலைமையிலான இந்திய அணியின் மீது எல்லா முன்னாள் ஜாம்பவான்களும் அதீத நம்பிக்கை வைத்துள்ளனர். இந்திய அணி வெல்வதற்கான வாய்ப்புகள் பிரகாசமாக இருப்பதாக கருதுகின்றனர். ஆனால் இந்திய அணியின் முன்னாள் ஜாம்பவானும் அண்டர் 19 மற்றும் இந்தியா ஏ அணிகளின் தலைமை பயிற்சியாளருமான ராகுல் டிராவிட் இந்திய அணியை எச்சரித்துள்ளார். 

rahul dravid warning kohli and co ahead of world cup

உலக கோப்பை குறித்து பேசிய ராகுல் டிராவிட், ஆஸ்திரேலியாவுக்கு எதிராக நாம் தோற்றது, உலக கோப்பையில் மிக மிகச்சிறப்பாக ஆட வேண்டும் என்பதை இந்திய அணிக்கு உணர்த்தியுள்ளது. இந்திய அணி கடந்த இரண்டு ஆண்டுகளாக சிறப்பாக ஆடிவருகிறது. ஒருநாள் போட்டிகளில் ஆதிக்கம் செலுத்தி ஆடிவருகிறது இந்திய அணி. இந்திய அணிதான் உலக கோப்பையை வெல்லும் என்ற கருத்து பரவலாக உள்ளது. உலக கோப்பையை வெல்ல வாய்ப்புள்ள அணிகளில் இந்திய அணியும் ஒன்றுதான். ஆனால் உலக கோப்பை தொடர் எளிதாக இருக்கப்போவதில்லை. மிகவும் கடினமாக இருக்கும். கோப்பையை வெல்வதற்கான போட்டி கடுமையாக இருக்கும். அதனால் இந்திய அணி மிகவும் சிறப்பாக ஆடவேண்டும் என்று ராகுல் டிராவிட் தெரிவித்துள்ளார். 
 

Follow Us:
Download App:
  • android
  • ios