Asianet News TamilAsianet News Tamil

தம்பி இங்க வாடா.. இதை சீக்கிரமா கொண்டுபோய் தவானிடம் கொடு..! ராகுல் டிராவிட் அவசர அவசரமா அனுப்பிய மெசேஜ்

இலங்கைக்கு எதிரான 2வது டி20 போட்டியில் களத்தில் இருந்த இந்திய அணியின் கேப்டன் ஷிகர் தவானுக்கு பயிற்சியாளர் ராகுல் டிராவிட் அவசர அவசரமாக ஒரு மெசேஜ் அனுப்பினார்.
 

rahul dravid sent message to shikhar dhawan through sandeep warrier
Author
Colombo, First Published Jul 29, 2021, 5:30 PM IST

இந்திய அணியின் பயிற்சியாளராக, தனது முதல் சுற்றுப்பயணத்தையே வெற்றிகரமான பயணமாக தொடங்கியுள்ளார் ராகுல் டிராவிட். 

மிகப்பெரிய லெஜண்ட் கிரிக்கெட்டரான ராகுல் டிராவிட், இந்திய அண்டர் 19 பயிற்சியாளராக இருந்தபோது, இளம் வீரர்களை முழுமையான வீரர்களாக உருவாக்கி இந்திய அணிக்கு கொடுத்தவர். இந்நிலையில், ராகுல் டிராவிட் முதல் முறையாக இந்திய அணியின் பயிற்சியாளராக இருந்து வழிநடத்துவதால், அவரது ஒவ்வொரு நகர்வும், செயல்பாடும், ரியாக்‌ஷனும் உற்றுநோக்கப்படுகிறது.

இந்திய வீரர்களை ஊக்குவிப்பது, அவர்களுக்கு ஆலோசனைகளை வழங்கி வழிநடத்துவது, எதிரணி கேப்டன் ஷனாகாவை அழைத்து களத்திலேயே பேசியது என ராகுல் டிராவிட்டின் செயல்பாடுகள் அனைத்தும் சமூக வலைதளங்களில் வைரலாவதுடன், செய்திகளாகவும் ஆகின்றன.

அவற்றின் வரிசையில், இலங்கைக்கு எதிரான 2வது டி20 போட்டியிலும் ராகுல் டிராவிட்டின் செயல்பாடு வைரலாகிவருகிறது. க்ருணல் பாண்டியாவுக்கு கொரோனா உறுதியானதால், அவருடன் தொடர்பில் இருந்த பிரித்வி ஷா, ஹர்திக் பாண்டியா, சூர்யகுமார் யாதவ், தீபக் சாஹர், இஷான் கிஷன் ஆகிய முக்கியமான வீரர்கள் யாருமே இல்லாமல் 2வது டி20 போட்டியில் ஆடியது இந்திய அணி. அப்படியிருந்தும் கூட, அந்த போட்டியில் கடைசி வரை மிகக்கடுமையாக போராடியது இந்திய அணி. ஆனாலும், அடித்திருந்தது வெறும் 132 ரன்கள் மட்டுமே என்பதால், அதற்குள்ளாக இலங்கையை கட்டுப்படுத்த முடியாமல் கடுமையாக போராடி கடைசி ஓவரில் தோற்றது இந்திய அணி.

இந்த போட்டியில், இலங்கை அணி இலக்கை விரட்டிக்கொண்டிருந்தபோது 18வது ஓவரின் முடிவில் மழை குறுக்கிட்டது. 18வது ஓவரின் முடிவில் இலங்கை அணி 6 விக்கெட் இழப்பிற்கு 113 ரன்கள் அடித்திருந்தது. அப்போது மழை குறுக்கிட்டதையடுத்து, டி.எல்.எஸ் முறைப்படி போட்டியின் முடிவை தீர்மானிப்பது குறித்து அம்பயர்கள் ஆலோசித்தனர். பிட்ச்சை மூடுவதற்கு கவர்கள் எடுத்துவரப்பட்டன.

இலங்கை அணி அந்த நேரத்தில் டி.எல்.எஸ் முறைப்படி தேவையான ஸ்கோரை விட, 3 ரன்கள் குறைவாக அடித்திருந்தது. அதனால் ஒருவேளை போட்டியின் முடிவு டி.எல்.எஸ் முறைப்படி தீர்மானிக்கப்பட்டால், இந்தியா தான் வெற்றி பெற்றிருக்கும். டி.எல்.எஸ் முறையில் கணக்கிடும் ஸ்கோர் விவரங்களை பேப்பரில் எழுதி சந்தீப் வாரியரிடம் கொடுத்து, கேப்டன் தவானிடம் கொடுக்கச்சொல்லி அனுப்பினார்.
 

Follow Us:
Download App:
  • android
  • ios