Asianet News TamilAsianet News Tamil

அவர் மனவலிமை வாய்ந்த கிரிக்கெட்டர்..! ஃபார்மில் இல்லாத வீரர் மீது ராகுல் டிராவிட் அபார நம்பிக்கை

காயத்திலிருந்து மீண்டு வந்த பின், தனது பழைய பவுலிங் ஃப்ளோவிற்கு வர முடியாமல் திணறிவரும் ஹர்ஷல் படேலுக்கு ஆதரவாக இந்திய அணியின் தலைமை பயிற்சியாளர் ராகுல் டிராவிட் குரல் கொடுத்துள்ளார்.
 

rahul dravid praises harshal patel that he is mentally very strong cricketer
Author
First Published Oct 1, 2022, 9:28 PM IST

டி20 உலக கோப்பைக்காக ரோஹித் சர்மா தலைமையிலான இந்திய அணி தீவிரமாக தயாராகிவருகிறது. டி20 உலக கோப்பைக்கு முன்பாக ஆஸ்திரேலியாவிற்கு எதிரான டி20 தொடரை வென்ற இந்திய அணி, தென்னாப்பிரிக்காவிற்கு எதிரான டி20 தொடரையும் வென்று டி20 உலக கோப்பைக்கு அதே நம்பிக்கையுடனும் உற்சாகத்துடனும் செல்லும் முனைப்பில் உள்ளது.

டி20 உலக கோப்பையில் ஜடேஜா ஆடாத நிலையில், பும்ராவும் ஆடமுடியாத சூழல் உள்ளது. இது இந்திய அணிக்கு பெரும் பின்னடைவாக இருக்கும். பும்ரா ஆடாததால் டி20 உலக கோப்பையில் புவனேஷ்வர் குமார் மற்றும் ஹர்ஷல் படேல் ஆகிய 2 சீனியர் பவுலர்கள் மீது அழுத்தம் அதிகமாகும். ஹர்ஷல் படேல் இந்திய அணியில் அண்மையில் தான் அறிமுகமானார் என்றாலும், அவர் அனுபவம் வாய்ந்த சீனியர் பவுலர். எனவே அவர் மீது பொறுப்பு அதிகம்.

இதையும் படிங்க - பும்ரா ஃபிட்னெஸ் குறித்து ராகுல் டிராவிட் சொன்ன முக்கியமான அப்டேட்

ஆனால் காயத்தால் ஆசிய கோப்பையில் ஆடாமல், காயத்திலிருந்து மீண்டு வந்து ஆஸ்திரேலியா மற்றும் தென்னாப்பிரிக்காவுக்கு எதிரான தொடர்களில் ஆடிவரும் ஹர்ஷல் படேல், அதிக ரன்களை வழங்கிவருகிறார். அது இந்திய அணிக்கு கவலையளிக்கும் விஷயமாக அமைந்துள்ளது. பும்ராவும் ஆடாத நிலையில், டி20 உலக கோப்பையில் ஹர்ஷல் படேல் தான் டெத் ஓவர்களை சிறப்பாக வீசவேண்டிய அவசியம் இருக்கிறது.

இந்நிலையில், ஹர்ஷல் படேல் குறித்து பேசிய இந்திய அணியின் தலைமை பயிற்சியாளர் ராகுல் டிராவிட், ஹர்ஷல் படேல் மீது அதிக நம்பிக்கை வைத்திருப்பதுடன், அவரை புகழ்ந்தும் பேசியிருக்கிறார். ”ஹர்ஷல் படேல் மனதளவில் வலிமையான கிரிக்கெட்டர். மிக அருமையான கிரிக்கெட் வீரர். கடந்த 2 ஆண்டுகளாக அவர் ஆடிய விதத்தை பாருங்கள். ஐபிஎல்லில் அவர் ஆடிய அணிக்காக மட்டுமல்லாது இந்திய அணிக்காகவும் அருமையான ஸ்பெல்களை வீசியிருக்கிறார். கடுமையாக பயிற்சி செய்துவருகிறார். 

இதையும் படிங்க - IND vs SA: 2வது டி20 போட்டிக்கான இந்திய அணியின் உத்தேச ஆடும் லெவன்

காயத்திலிருந்து மீண்டு இந்திய அணியில் மீண்டும் கம்பேக் கொடுத்துள்ளார். எனவே அவரது ஃப்ளோவிற்கு வர கொஞ்ச காலம் எடுக்கும். ஹைதராபாத்தில் நடந்த ஆஸ்திரேலியாவிற்கு எதிரான டி20 போட்டியில் கடைசி ஓவரை அருமையாக வீசினார். தென்னாப்பிரிக்காவுக்கு எதிராகவும் மிகச்சிறப்பாக வீசினார். ஆஸ்திரேலியாவிற்கு எதிரான போட்டியில் முக்கியமான கட்டத்தில் டிம் டேவிட்டின் விக்கெட்டை ஹர்ஷல் படேல்  வீழ்த்தினார். அதுதான் ஆட்டத்தில் பெரிய வித்தியாசத்தை ஏற்படுத்தியது. எந்தளவிற்கு அதிகமான போட்டிகளில் ஆடுகிறாரோ அந்தளவிற்கு ஹர்ஷல் படேல் மேம்படுவார்” என்று ராகுல் டிராவிட் தெரிவித்தார்.
 

  

Follow Us:
Download App:
  • android
  • ios