Asianet News TamilAsianet News Tamil

#ENGvsIND இங்கிலாந்துக்கு எதிரான டெஸ்ட் தொடரில் ஸ்பின் ஜோடி அவங்க தான்..! ராகுல் டிராவிட் அதிரடி

இங்கிலாந்துக்கு எதிரான டெஸ்ட் தொடரில் அஷ்வின் - ஜடேஜா தான் ஸ்பின்னர்களாக ஆடுவார்கள் என்று ராகுல் டிராவிட் தெரிவித்துள்ளார்.
 

rahul dravid opines ashwin and jadeja will play as indian spinners for test series against england
Author
Chennai, First Published May 11, 2021, 4:38 PM IST

இந்திய அணியில் 2017லிருந்து ரிஸ்ட் ஸ்பின்னர்களுக்கு முக்கியத்துவம் கொடுக்கப்பட்ட நிலையில், அண்மைக்காலமாக மீண்டும் அஷ்வின் - ஜடேஜா ஜோடி அசத்தலாக பந்துவீசியது மட்டுமல்லாது பேட்டிங்கும் சிறப்பாக ஆடுவதால் இந்திய அணியில் முதன்மை இடத்தை பிடித்துள்ளது.

அஷ்வின் - ஜடேஜா ஆகிய விரல் ஸ்பின்னர்கள் மட்டுமல்லாது, அக்ஸர் படேல் - வாஷிங்டன் சுந்தர் ஆகிய இருவரும் அபாரமாக பந்துவீசுவதுடன் பேட்டிங்கும் சிறப்பாக ஆடி அணியில் இரண்டாவது ஸ்பின் ஜோடியாக எடுக்கப்படுகின்றனர். அஷ்வின், ஜடேஜா, அக்ஸர், சுந்தர் ஆகிய ஸ்பின்னர்கள் பேட்டிங்கும் நன்றாக ஆடுவது அணி காம்பினேஷனுக்கு வலுசேர்க்கிறது.

ஐசிசி உலக டெஸ்ட் சாம்பியன்ஷிப் ஃபைனலுக்கான இந்திய அணியிலும் இவர்கள் நால்வருமே எடுக்கப்பட்டுள்ளனர். ரிஸ்ட் ஸ்பின்னர் குல்தீப் யாதவுக்கு அணியில் இடமில்லை.

டெஸ்ட் சாம்பியன்ஷிப் ஃபைனலுக்கு பிறகு இங்கிலாந்தில் 5 டெஸ்ட் போட்டிகள் கொண்ட தொடரில் இந்திய அணி ஆடவுள்ள நிலையில், அந்த தொடரை 3-2 என இந்திய அணி தான் வெல்லும் என கூறிய லெஜண்ட் ராகுல் டிராவிட், இங்கிலாந்து தொடரில் அஷ்வின் - ஜடேஜா தான் ஸ்பின்னர்களாக ஆடுவார்கள் என தெரிவித்துள்ளார்.

வெளிநாட்டு டெஸ்ட் தொடர்களில் ரிஸ்ட் ஸ்பின்னருக்குத்தான் முன்னுரிமை கொடுக்கப்பட்டுவந்த நிலையில், இப்போது மீண்டும் இந்திய அணி அஷ்வின் மற்றும் ஜடேஜா ஆகியோர் பக்கம் திரும்பியுள்ளது. இந்நிலையில், இங்கிலாந்துக்கு எதிரான டெஸ்ட் தொடரில் அஷ்வினும் ஜடேஜாவும் தான் ஆடுவார்கள் என்று டிராவிட் தெரிவித்துள்ளார்.

இதுகுறித்து பேசியுள்ள ராகுல் டிராவிட், அஷ்வினும் ஜடேஜாவும் தான் ஸ்பின்னர்களாக ஆடுவார்கள். அஷ்வினும் ஜடேஜாவும் நன்றாக பேட்டிங் ஆடுகிறார்கள். அவர்கள் நன்றாக பேட்டிங் ஆடுவதால் அணி நல்ல ஆல்ரவுண்ட் பேலன்ஸை பெற்றுள்ளது. ஹர்திக் பாண்டியா பந்துவீசாததால், ஒரு ஆல்ரவுண்ட் இடம் உள்ளது. இங்கிலாந்தில் கோடைகாலத்தில் பிட்ச் வறண்டிருக்கும் என்பதால் ஸ்பின்னிற்கு சாதகமாக இருக்கும். இந்திய அணி அஷ்வின், ஜடேஜா என்ற 2 சிறந்த ஸ்பின்னர்களை பெற்றிருப்பது பலம் என்று டிராவிட் தெரிவித்துள்ளார்.
 

Follow Us:
Download App:
  • android
  • ios