Asianet News TamilAsianet News Tamil

Asia Cup: ரஹ்மானுல்லா குர்பாஸ் காட்டடி அரைசதம்.. இலங்கைக்கு கடின இலக்கை நிர்ணயித்த ஆஃப்கானிஸ்தான்

ஆசிய கோப்பை சூப்பர் 4 சுற்றில் இலங்கைக்கு எதிரான போட்டியில் முதலில் பேட்டிங் ஆடிய ஆஃப்கானிஸ்தான் அணி 20 ஓவரில் 175 ரன்களை குவித்து, 176 ரன்கள் என்ற கடின இலக்கை இலங்கைக்கு நிர்ணயித்துள்ளது.
 

rahmanullah gurbaz half century helps afghanistan to set tough target to sri lanak in asia cup 2022 super 4 match
Author
First Published Sep 3, 2022, 9:45 PM IST

ஆசிய கோப்பை கிரிக்கெட் தொடர் ஐக்கிய அரபு அமீரகத்தில் விறுவிறுப்பாக நடந்துவருகிறது. ஏ பிரிவில் இந்தியா, பாகிஸ்தான் அணிகளும், பி பிரிவில் ஆஃப்கானிஸ்தான், இலங்கை அணிகளும் சூப்பர் 4 சுற்றுக்கு முன்னேறிய நிலையில், ஆஃப்கானிஸ்தான் - இலங்கை அணிகளுக்கு இடையேயான போட்டி நடந்துவருகிறது.

ஷார்ஜாவில் நடந்துவரும் இலங்கை - ஆஃப்கானிஸ்தான் இடையேயான சூப்பர் சுற்றின் முதல் போட்டியில் டாஸ் வென்ற இலங்கை அணி கேப்டன் தசுன் ஷனாகா ஃபீல்டிங்கை தேர்வுசெய்தார். 

இதையும் படிங்க - டி20 உலக கோப்பையிலிருந்தும் விலகிய ரவீந்திர ஜடேஜா..! இந்திய அணிக்கு மரண அடி

இலங்கை அணி:

 பதும் நிசாங்கா, குசால் மெண்டிஸ் (விக்கெட் கீப்பர்), சாரித் அசலங்கா, தனுஷ்கா குணதிலகா, பானுகா ராஜபக்சா, தசுன் ஷனாகா (கேப்டன்), வனிந்து ஹசரங்கா, சாமிகா கருணரத்னே, மஹீஷ் தீக்‌ஷனா, அசிதா ஃபெர்னாண்டோ, தில்ஷான் மதுஷங்கா.

ஆஃப்கானிஸ்தான் அணி:

ஹஸ்ரதுல்லா சேஸாய், ரஹ்மானுல்லா குர்பாஸ் (விக்கெட் கீப்பர்), இப்ராஹிம் ஜட்ரான், நஜிபுல்லா ஜட்ரான், கரிம் ஜனத், முகமது நபி (கேப்டன்), ரஷீத் கான், ஷமியுல்லா ஷின்வாரி, நவீன் உல் ஹக், முஜீபுர் ரஹ்மா, ஃபஸல்ஹக் ஃபரூக்கி.

முதலில் பேட்டிங் ஆடிய ஆஃப்கானிஸ்தான் அணியின் தொடக்க வீரர் ரஹ்மானுல்லா குர்பாஸ் அதிரடியாக பேட்டிங் ஆடி அரைசதம் அடித்தார். 45 பந்தில் 4 பவுண்டரிகள் மற்றும் 6 சிக்ஸர்களுடன் 84 ரன்களை குவித்து, 16 ரன்களில் சதத்தை தவறவிட்டார்.

இதையும் படிங்க - நீ நாட் அவுட்டா போவதால் டீமுக்கு என்ன யூஸ்.? அரைசதம் அடித்தும் வாசிம் அக்ரமிடம் திட்டு வாங்கிய முகமது ரிஸ்வான்

இப்ராஹிம் ஜட்ரான் 38 பந்தில் 40 ரன்கள் அடித்தார். நஜிபுல்லா ஜட்ரான் 10 பந்தில் 17 ரன்கள் அடித்தார். ரஹ்மானுல்லா குர்பாஸின் காட்டடி பேட்டிங்கால் 20 ஓவரில் 175 ரன்களை குவித்த ஆஃப்கானிஸ்தான் அணி, 176 ரன்கள் என்ற கடின இலக்கை இலங்கைக்கு நிர்ணயித்துள்ளது.
 

Follow Us:
Download App:
  • android
  • ios