Asianet News TamilAsianet News Tamil

உலக கோப்பை அணியில் இடம்பிடிக்க எனக்கு கடைசி சான்ஸ் ஒண்ணு இருக்கு!! சீனியர் வீரர் நம்பிக்கை

இந்திய அணியின் பேட்டிங் ஆர்டரும் நன்றாக செட் ஆகிவிட்டது. ரோஹித், தவான், கோலி என முதல் மூன்று வீரர்கள் அணிக்கு வலு சேர்க்கின்றனர். தவான் அண்மைக்காலமாக ஃபார்மில் இல்லாவிட்டாலும் அவர் ஃபார்முக்கு திரும்புவதற்கு ஒரு நல்ல இன்னிங்ஸ் போதும். டாப் ஆர்டர் வலுவாக இருப்பதே இந்திய அணியின் மிகப்பெரிய பலம். நான்காம் இடத்திற்கு சரியான வீரரை தேர்வு செய்ய நீண்ட தேடுதல் படலம் நடைபெற்றது. 
 
rahane still believes he will be selected for world cup squad
Author
India, First Published Mar 10, 2019, 11:17 AM IST

உலக கோப்பை நெருங்கிய நிலையில், இந்திய அணியின் பேட்டிங் ஆர்டர், பவுலிங் என அனைத்துமே ஓரளவிற்கு உறுதியாகிவிட்டது. 2 இடங்களுக்கான வீரர்கள் மட்டுமே இன்னும் உறுதி செய்யப்படவில்லை. 

இந்திய அணி முன்னெப்போதும் இல்லாத அளவிற்கு மிகச்சிறந்த பவுலிங் யூனிட்டை பெற்றிருப்பது கூடுதல் பலம். உலக கோப்பையில் இந்திய பவுலர்கள் மிகப்பெரிய தாக்கத்தை ஏற்படுத்துவார்கள் என எதிர்பார்க்கப்படுகிறது. 

rahane still believes he will be selected for world cup squad

இந்திய அணியின் பேட்டிங் ஆர்டரும் நன்றாக செட் ஆகிவிட்டது. ரோஹித், தவான், கோலி என முதல் மூன்று வீரர்கள் அணிக்கு வலு சேர்க்கின்றனர். தவான் அண்மைக்காலமாக ஃபார்மில் இல்லாவிட்டாலும் அவர் ஃபார்முக்கு திரும்புவதற்கு ஒரு நல்ல இன்னிங்ஸ் போதும். டாப் ஆர்டர் வலுவாக இருப்பதே இந்திய அணியின் மிகப்பெரிய பலம். நான்காம் இடத்திற்கு சரியான வீரரை தேர்வு செய்ய நீண்ட தேடுதல் படலம் நடைபெற்றது. 

rahane still believes he will be selected for world cup squad

ரஹானே, ஷ்ரேயாஸ் ஐயர், ரெய்னா, மனீஷ் பாண்டே என பல வீரர்களை களமிறக்கிவிட்டு யாருமே சரியா வராததால் நீண்ட தேடுதல் படலத்திற்கு பேட்டிங்கில் நான்காம் வரிசைக்கு தேர்வு செய்யப்பட்ட வீரர் ராயுடு. ஆசிய கோப்பை, வெஸ்ட் இண்டீஸ் தொடர் ஆகியவற்றில் சிறப்பாக ஆடினார் ராயுடு. நியூசிலாந்துக்கு எதிரான ஒரு போட்டியில் முதல் 4 விக்கெட்டுகளை இந்திய அணி விரைவில் இழந்துவிட்ட நிலையில், களத்தில் நிலைத்து ஆடி 90 ரன்களை குவித்து அணியை சரிவிலிருந்து மீட்டெடுத்து நம்பிக்கையளித்தார். 

rahane still believes he will be selected for world cup squad

ஆசிய கோப்பை, வெஸ்ட் இண்டீஸ் தொடர், ஆஸ்திரேலிய தொடர் ஆகியவற்றில் நன்றாக ஆடினார். நியூசிலாந்துக்கு எதிரான போட்டியில் இக்கட்டான சூழலில் அவர் அடித்த 90 ரன்கள் மிகவும் சிறப்பும் முக்கியத்துவமும் வாய்ந்தது. அந்த இன்னிங்ஸ் அவரது சிறப்பான பேட்டிங்குகளில் ஒன்று. அதன்பிறகு அவர் நான்காம் வரிசையை உறுதி செய்துவிட்டதாகவே பார்க்கப்பட்டது. 

rahane still believes he will be selected for world cup squad

ஆனால் ஆஸ்திரேலிய தொடரில் முதல் மூன்று போட்டிகளிலும் சொதப்பிவிட்டார். 2 மற்றும் 3வது போட்டிகளில் விரைவிலேயே களத்திற்கு வந்தார் ராயுடு. அவருக்கு பெரிய இன்னிங்ஸ் ஆடி தனது திறமையை நிரூபித்து உலக கோப்பை அணியில் இடத்தை உறுதி செய்யும் வாய்ப்பு கிடைத்தது. ஆனால் இரண்டு அரிய வாய்ப்புகளையும் தவறவிட்டார் ராயுடு. ராயுடு தன்னம்பிக்கையுடன் ஆடவில்லை. அவரது தன்னம்பிக்கையற்ற மனநிலையும் மோசமான் ஃபார்மும் மீண்டும் நான்காம் இடம் குறித்த கவலையை ஏற்படுத்தியுள்ளது. 

rahane still believes he will be selected for world cup squad

இதற்கிடையே பயிற்சியாளர் ரவி சாஸ்திரி கூறிய ஒரு கருத்து கடும் விவாதத்துக்கு உள்ளானது. அதாவது தேவைப்பட்டால் விராட் கோலி நான்காம் வரிசையில் களமிறக்கப்படுவார் என்று சாஸ்திரி தெரிவித்தார். ராகுலை மூன்றாம் வரிசையில் இறக்கிவிட்டு கோலி 4ம் வரிசையில் இறக்கப்படுவார் என்ற கருத்து கடும் விவாதத்தை ஏற்படுத்தியது. முதல் மூன்று வீரர்கள் நன்றாக செட் ஆகிவிட்ட நிலையில், அதை மாற்ற வேண்டிய அவசியமே இல்லை என்பது சில முன்னாள் வீரர்களின் கருத்து.

rahane still believes he will be selected for world cup squad

இந்நிலையில், வெளிநாடுகளில் நல்ல ரெக்கார்டு வைத்திருக்கும் ரஹானே, மீண்டும் இந்திய அணியில் இடம்பிடிக்கும் முனைப்பில் உள்ளார். வெளிநாடுகளில் நல்ல ரெக்கார்டை வைத்துள்ள ரஹானே, கடைசியாக 2018ம் ஆண்டு தொடக்கத்தில் தென்னாப்பிரிக்காவுக்கு எதிரான தொடரில் ஆடியதுதான் கடைசி. அதன்பிறகு ஒருநாள் போட்டிகளில் ரஹானே ஆடவில்லை. இங்கிலாந்து தொடர், ஆசிய கோப்பை, வெஸ்ட் இண்டீஸ், ஆஸ்திரேலியா, நியூசிலாந்து ஆகிய அணிகளுக்கு எதிரான தொடரில் புறக்கணிக்கப்பட்ட ரஹானே, இந்தியாவில் நடந்துவரும் ஆஸ்திரேலிய அணிக்கு எதிரான தொடரிலும் புறக்கணிக்கப்பட்டுள்ளார். 

rahane still believes he will be selected for world cup squad

இதற்கிடையே ரஹானேவை அணியில் எடுப்பது குறித்து பரிசீலித்துவருவதாக தேர்வுக்குழு தலைவர் எம்.எஸ்.கே.பிரசாத் தெரிவித்திருந்தார். அதனால் இந்தியாவில் நடந்துவரும் ஆஸ்திரேலியாவுக்கு எதிரான தொடரில் அணியில் ரஹானே சேர்க்கப்படுவார் என எதிர்பார்க்கப்பட்டது. ஆனால் ரஹானே அணியில் இல்லை. 

rahane still believes he will be selected for world cup squad

தொடர்ச்சியாக இந்திய ஒருநாள் அணியில் புறக்கணிக்கப்பட்டாலும், இன்னும் கூட, உலக கோப்பை அணியில் இடம்பெறும் நம்பிக்கையில் உள்ளார் ரஹானே. உலக கோப்பை அணியில் இடம்பெறுவதற்கு, ஐபிஎல்லை தனது கடைசி வாய்ப்பாக கருதும் ரஹானே, ஐபிஎல்லில் சிறப்பாக ஆடி உலக கோப்பை அணியில் இடம்பெறும் நம்பிக்கையில் உள்ளார். உலக கோப்பை அணியில் தன்னை புறக்கணிக்க முடியாத அளவிற்கு ஐபிஎல்லில் ஆட உள்ளதாக ராஜஸ்தான் ராயல்ஸ் கேப்டன் ரஹானே நம்பிக்கை தெரிவித்துள்ளார். 

rahane still believes he will be selected for world cup squad

சையத் முஷ்டாக் அலி டி20 தொடரில் மும்பை அணியின் கேப்டனாக இருந்த ரஹானே, காயம் காரணமாக தொடரின் பாதியிலிருந்து விலகியுள்ளார். அவருக்கு பதிலாக மும்பை அணியின் கேப்டனாக ஷ்ரேயாஸ் ஐயர் செயல்பட்டு வருகிறார். எனினும் முழு உடற்தகுதியுடன் ஐபிஎல்லில் அவர் ஆடுவார்.
 
Follow Us:
Download App:
  • android
  • ios