Asianet News TamilAsianet News Tamil

LSG vs KKR: டி காக் காட்டடி சதம்.. ராகுல் அரைசதம்..! 20 ஓவரில் விக்கெட் இழப்பின்றி ரன்களை குவித்த லக்னோ அணி

குயிண்டன் டி காக்கின் காட்டடி சதத்தால் 20 ஓவரில் 210 ரன்களை குவித்த லக்னோ சூப்பர் ஜெயிண்ட்ஸ் அணி, 211 ரன்கள் என்ற கடின இலக்கை கேகேஆருக்கு நிர்ணயித்துள்ளது.
 

quinton de kock century helps lsg to set tough target to kkr in ipl 2022
Author
Mumbai, First Published May 18, 2022, 9:21 PM IST

ஐபிஎல் 15வது சீசன் இறுதிக்கட்டத்தை நெருங்கிய நிலையில், பிளே ஆஃபிற்கு முன்னேற இரு அணிகளுக்குமே முக்கியமான போட்டியில் லக்னோ சூப்பர் ஜெயிண்ட்ஸும் கேகேஆரும் ஆடிவருகின்றன.

மும்பை டி.ஒய்.பாட்டீல் மைதானத்தில் நடந்துவரும் இந்த போட்டியில் டாஸ் வென்ற லக்னோ கேப்டன் கேஎல் ராகுல் பேட்டிங்கை தேர்வு செய்தார்.

லக்னோ சூப்பர் ஜெயிண்ட்ஸ் அணி:

கேஎல் ராகுல் (கேப்டன்), குயிண்டன் டி காக் (விக்கெட் கீப்பர்), எவின் லூயிஸ், தீபக் ஹூடா, மனன் வோரா, மார்கஸ் ஸ்டோய்னிஸ், ஜேசன் ஹோல்டர், கிருஷ்ணப்பா கௌதம், மோசின் கான், ஆவேஷ் கான், ரவி பிஷ்னோய்.

கேகேஆர் அணி:

வெங்கடேஷ் ஐயர், அபிஜித் டோமர், ஷ்ரேயாஸ் ஐயர் (கேப்டன்), நிதிஷ் ராணா, சாம் பில்லிங்ஸ் (விக்கெட் கீப்பர்), ரிங்கு சிங், ஆண்ட்ரே ரசல், சுனில் நரைன், உமேஷ் யாதவ், டிம் சௌதி, வருண் சக்கரவர்த்தி.

முதலில் பேட்டிங் ஆடிய லக்னோ அணியின் தொடக்க வீரர்கள் குயிண்டன் டி காக் மற்றும் கேஎல் ராகுல் ஆகிய இருவரும் அபாரமாக பேட்டிங் ஆடினர். தொடக்கம் முதலே அடித்து ஆடிய இருவரும் அரைசதம் அடித்தனர். விக்கெட்டே விட்டுக்கொடுக்காமல், அதேவேளையில் இருவரும் அடித்தும் ஆடினர்.

15 ஓவருக்கு மேல் ருத்ரதாண்டவம் ஆடினார் டி காக். 16வது ஓவரிலிருந்து சிக்ஸர் மழை பொழிந்தார் டி காக். 59 பந்தில் சதமடித்த டி காக், 19வது ஓவரில் 3 சிக்ஸர்களும், கடைசி ஓவரில் 4 பவுண்டரிகளும் விளாசினார். ராகுல் 51 பந்தில் 68 ரன்களும், டி காக் 70 பந்தில் 140 ரன்களும் குவிக்க, 20 ஓவரில் 210 ரன்களை குவித்த லக்னோ அணி, 211 ரன்கள் என்ற கடின இலக்கை கேகேஆருக்கு நிர்ணயித்துள்ளது. ஐபிஎல்லில் ஒரு தொடக்க ஜோடி விக்கெட்டே இழக்காமல் இன்னிங்ஸை முடிப்பது இதுவே முதல் முறை.
 

Follow Us:
Download App:
  • android
  • ios