Asianet News TamilAsianet News Tamil

நீ வேலைக்கு ஆகமாட்ட; சொதப்பல் வீரரை தூக்கிப்போட்டு உலகின் நம்பர் 1 டி20 பேட்ஸ்மேனை களமிறக்கும் பஞ்சாப் கிங்ஸ்

ஆர்சிபிக்கு எதிரான போட்டியில் களமிறங்கும் பஞ்சாப் கிங்ஸ் அணியின் உத்தேச ஆடும் லெவனை பார்ப்போம்.
 

punjab kings probable playing eleven for the match against rcb in ipl 2021
Author
Ahmedabad, First Published Apr 30, 2021, 2:26 PM IST

ஐபிஎல் 14வது சீசனின் இன்றைய போட்டியில் பஞ்சாப் கிங்ஸ் மற்றும் ஆர்சிபி அணிகள் மோதுகின்றன. அகமதாபாத்தில் நடக்கும் இந்த போட்டியில் வெற்றி பெறுவது பஞ்சாப் கிங்ஸ் அணிக்கு மிக முக்கியம். 

இந்த சீசனில் பஞ்சாப் அணி இதுவரை ஆடிய 6 போட்டிகளில் வெறும் 2 வெற்றிகளை மட்டுமே பெற்று புள்ளி பட்டியலில் 6ம் இடத்தில் உள்ளது. எனவே ஆர்சிபிக்கு எதிரான போட்டியில் 3வது வெற்றியை எதிர்நோக்கி களமிறங்கும் பஞ்சாப் கிங்ஸ் அணி, இந்த போட்டியில் ஒரு மாற்றத்துடன் களமிறங்கும் வாய்ப்புள்ளது.

இந்த சீசனில் 3 டக் அவுட்டுகளுடன் படுமோசமாக சொதப்பிவரும் வெஸ்ட் இண்டீஸ் வீரரான நிகோலஸ் பூரனை நீக்கிவிட்டு, உலகின் நம்பர் 1 டி20 பேட்ஸ்மேனான இங்கிலாந்து வீரர் டேவிட் மாலனை ஆடும் லெவனில் பஞ்சாப் அணி சேர்க்கும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.

டேவிட் மாலன் அணியில் இருக்கும்போதிலும், தங்கள் அணியின் பழைய வீரருக்கு முன்னுரிமை கொடுத்து பூரன் அணியில் எடுக்கப்பட்டதுடன், அவர் சொதப்பியபோதிலும் அவருக்கு தொடர் வாய்ப்புகள் வழங்கப்பட்டன. ஆனால் அதை பூரன் பயன்படுத்திக்கொள்ளாத நிலையில், உலகின் நம்பர் 1 பேட்ஸ்மேனை அணியில் வைத்துக்கொண்டு கண்டிப்பாக பஞ்சாப் அணி வீணடிக்க விரும்பாது. எனவே இன்றைய போட்டியில் பூரனுக்கு பதிலாக டேவிட் மாலன் ஆடுவார்.

உத்தேச பஞ்சாப் கிங்ஸ் அணி:

கேஎல் ராகுல்(கேப்டன், விக்கெட் கீப்பர்), மயன்க் அகர்வால், கிறிஸ் கெய்ல், டேவிட் மாலன், தீபக் ஹூடா, ஷாருக்கான், மோய்ஸஸ் ஹென்ரிக்ஸ், கிறிஸ் ஜோர்டான், ரவி பிஷ்னோய், முகமது ஷமி, அர்ஷ்தீப் சிங்.
 

Follow Us:
Download App:
  • android
  • ios