டெல்லி கேபிடள்ஸுக்கு எதிரான இன்றைய போட்டியில் களமிறங்கும் உத்தேச பஞ்சாப் கிங்ஸ் அணியை பார்ப்போம். 

ஐபிஎல் 14வது சீசனின் இன்று 2 போட்டிகள் நடக்கின்றன. பிற்பகல் 3.30 மணிக்கு நடக்கும் போட்டியில் ராஜஸ்தான் ராயல்ஸ் மற்றும் சன்ரைசர்ஸ் அணிகள் மோதுகின்றன. இரவு 7.30 மணிக்கு அகமதாபாத்தில் நடக்கும் போட்டியில் பஞ்சாப் கிங்ஸ் மற்றும் டெல்லி கேபிடள்ஸ் அணிகள் மோதுகின்றன.

Add Asianetnews Tamil as a Preferred SourcegooglePreferred

பஞ்சாப் கிங்ஸ் அணி இதுவரை ஆடிய 7 போட்டிகளில் 3 வெற்றிகளுடன் 6 புள்ளிகளை பெற்று புள்ளி பட்டியலில் 5ம் இடத்தில் உள்ள நிலையில், இன்று 4வது வெற்றியை எதிர்நோக்கி டெல்லி கேபிடள்ஸை எதிர்கொள்கிறது பஞ்சாப் அணி. ஆர்சிபிக்கு எதிரான கடந்த போட்டியில் அடைந்த வெற்றி பஞ்சாப் அணியின் தன்னம்பிக்கையை அதிகரித்திருக்கு நிலையில், வெற்றி முனைப்பில் இன்று களம் காண்கிறது பஞ்சாப் அணி.

கடந்த போட்டியில் காயம் காரணமாக பஞ்சாப் கிங்ஸ் அணியில் தொடக்க வீரர் மயன்க் அகர்வால் ஆடாத நிலையில், இன்றைய போட்டியில் அவர் ஆடுவார் என்று எதிர்பார்க்கப்படுகிறது. எனவே அவர் ஆடினால், பிரப்சிம்ரன் சிங் நீக்கப்படுவார்.

கடந்த போட்டியிலேயே நிகோலஸ் பூரனுக்கு பதிலாக உலகின் நம்பர் 1 டி20 பேட்ஸ்மேனான டேவிட் மாலன் சேர்க்கப்படுவார் என எதிர்பார்க்கப்பட்ட நிலையில், அந்த மாற்றம் செய்யப்படவில்லை. ஆனால் இன்றைய போட்டியில் கண்டிப்பாக பூரனுக்கு பதிலாக மாலன் சேர்க்கப்படுவார்.

உத்தேச பஞ்சாப் கிங்ஸ் அணி:

கேஎல் ராகுல்(கேப்டன், விக்கெட் கீப்பர்), மயன்க் அகர்வால், கிறிஸ் கெய்ல், டேவிட் மாலன், தீபக் ஹூடா, ஷாருக்கான், ஹர்ப்ரீத் ப்ரார், கிறிஸ் ஜோர்டான், ரிலே மெரிடித், ரவி பிஷ்னோய், முகமது ஷமி.