Asianet News TamilAsianet News Tamil

SRH vs PBKS: சன்ரைசர்ஸை வீழ்த்தி பஞ்சாப் கிங்ஸ் வெற்றி

சன்ரைசர்ஸுக்கு எதிரான போட்டியில் 5  விக்கெட் வித்தியாசத்தில் பஞ்சாப் கிங்ஸ் அணி வெற்றி பெற்றது.

Punjab kings beat sunrisers Hyderabad by 5 wickets in ipl 2022
Author
Mumbai, First Published May 23, 2022, 12:32 AM IST

ஐபிஎல் 15வது சீசனின் கடைசி லீக் போட்டியில் சன்ரைசர்ஸ் ஹைதராபாத் மற்றும் பஞ்சாப் கிங்ஸ் அணிகள் மோதின. குஜராத் டைட்டன்ஸ், ராஜஸ்தான் ராயல்ஸ், லக்னோ சூப்பர் ஜெயிண்ட்ஸ் மற்றும் ஆர்சிபி ஆகிய 4 அணிகளும் பிளே ஆஃபிற்கு முன்னேறிவிட்டதால் இந்த போட்டி எந்த தாக்கத்தையும் ஏற்படுத்தாது என்பதால் இந்த போட்டி மீது எதிர்பார்ப்பு எதுவும் இல்லை.

மும்பை வான்கடேவில் நடந்த இந்த போட்டியில் டாஸ் வென்ற சன்ரைசர்ஸ் ஹைதராபாத் அணி முதலில் பேட்டிங் ஆடியது. 

சன்ரைசர்ஸ் ஹைதராபாத் அணி:

அபிஷேக் ஷர்மா, ப்ரியம் கர்க், ராகுல் திரிபாதி, மார்க்ரம், நிகோலஸ் பூரன் (விக்கெட் கீப்பர்), ரொமாரியோ ஷெஃபெர்டு, வாஷிங்டன் சுந்தர், ஜெகதீஷா சுஜித், புவனேஷ்வர் குமார் (கேப்டன்), ஃபஸால்ஹக் ஃபரூக்கி, உம்ரான் மாலிக்.

பஞ்சாப் கிங்ஸ் அணி:

ஜானி பேர்ஸ்டோ, ஷிகர் தவான், லியாம் லிவிங்ஸ்டோன், மயன்க் அகர்வால் (கேப்டன்), ஷாருகான், ஜித்தேஷ் ஷர்மா (விக்கெட் கீப்பர்), ஹர்ப்ரீத் ப்ரார், நேதன் எல்லிஸ், ப்ரெரக் மன்கத், ரபாடா, அர்ஷ்தீப் சிங்.

முதலில் பேட்டிங் ஆடிய சன்ரைசர்ஸ் அணியின் தொடக்க வீரர் பிரியம் கர்க் 4 ரன்னில் ஆட்டமிழக்க, ராகுல் திரிபாதி 20 ரன்னில் ஆட்டமிழந்தார். மற்றொரு தொடக்க வீரரான அபிஷேக் ஷர்மா அடித்து ஆடி 43ரன்கள் அடித்தார். ஆனால் பெரிய இன்னிங்ஸ் ஆடாமல் அரைசதத்தை தவறவிட்டு ஆட்டமிழந்தார். மார்க்ரம் 21 ரன்கள் அடித்தார். பின்வரிசையில் வாஷிங்டன் சுந்தர் 25ரன்கள் அடித்து பங்களிப்பு செய்தார். ரொமாரியோ ஷெஃபெர்டு அதிரடியாக ஆடி 15 பந்தில் 26 ரன்கள் அடித்தார். 20 ஓவரில் 156 ரன்கள் அடித்தது.

157 ரன்கள் என்ற இலக்கை விரட்டிய பஞ்சாப் கிங்ஸ் அணி அந்த இலக்கை எட்டி 5 விக்கெட் வித்தியாசத்தில் வெற்றி பெற்றது.

Follow Us:
Download App:
  • android
  • ios